அஜித் மருத்துவமனையில் இருந்தபோது கேட்டு ஓகே செய்த கதை. எந்த படம் தெரியுமா?

By Rajkumar · 1/5/2020

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித் குமார். ரசிகர்கள் அன்போடு 'தல' என்று அழைக்கப்படும் அஜித், 1993-ஆம் ஆண்டு வெளி வந்த 'அமராவதி' என்ற படத்தில் தான் முதன் முறையாக கதையின் நாயகனாக நடித்தார். அந்த படத்தினை இயக்குநர் செல்வா இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து 'பவித்ரா, ஆசை, வான்மதி, கல்லூரி வாசல், காதல் கோட்டை, உல்லாசம், காதல் மன்னன், வாலி, அமர்க்களம், சிட்டிசன்' போன்ற பல படங்களில் நடித்தார் 'தல' அஜித்.

'தல' அஜித்துக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். 'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு மீண்டும் 'தல' அஜித்துடன் இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணி அமைத்திருக்கும் படம் தான் 'வலிமை'.

இதையும் பாருங்க : வாலி படத்திற்கு முன்பாகவே அஜித் படத்தில் நடித்துள்ள எஸ் ஜே சூர்யா. இதோ அறிய புகைப்படம்.

ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இது அதிக பொருட்செலவில் தயாராகி கொண்டிருக்கிறது. இன்று (மே 1-ஆம் தேதி) 'தல' அஜித்தின் பிறந்த நாள். அவர் நடித்து ஹிட்டான ஒரு படத்தின் சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளி வந்திருக்கிறது. 2000-யில் வெளி வந்த தமிழ் திரைப்படம் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'. இந்த படத்தினை பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் இயக்கியிருந்தார்.

இதில் 'தல' அஜித்துடன் இணைந்து மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான 'மெகா ஸ்டார்' மம்மூட்டி நடித்திருந்தார். அஜித்துக்கு ஜோடியாக தபுவும், மம்மூட்டிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய்யும் நடித்திருந்தனர். மேலும், முக்கிய வேடங்களில் அப்பாஸ், மணிவண்ணன், ஸ்ரீ வித்யா, ரகுவரன், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்திருந்தனர்.

இதையும் பாருங்க : வல்லவன் படத்தில் நடித்துள்ள பிக் பாஸ் 2 பிரபலம். இதுவரை இவரை நோட் செய்துள்ளீர்களா ?

அஜித்துக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, அங்கு ஓய்வில் இருந்திருக்கிறார். அப்போது தான், 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தின் கதையை இயக்குநர் ராஜீவ் மேனன், அஜித்தை மருத்துவமனையிலையே சந்தித்து அவரிடம் சொல்லியிருக்கிறார். அஜித்துக்கு கதை மிகவும் பிடித்து போக, உடனே கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். இந்த படத்துக்கு 'இசைப் புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிதும் பேசப்பட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full