வாலி படத்திற்கு முன்பாகவே அஜித் படத்தில் நடித்துள்ள எஸ் ஜே சூர்யா. இதோ அறிய புகைப்படம்.

0
64117
sjsurya
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அல்டிமேட் ஸ்டார் அஜித். உழைப்பாளர் தினமான இன்று தமிழ் சினிமாவில் உழைப்பிற்கு அடையாளமாக இருக்கும் அஜித்தின் 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் இந்த சமயத்தில் அஜித் பற்றிய பல்வேறு தகவல்களை ரசிகர்கள் தோண்டி எடுத்து வருகிறார்கள் அந்த வகையில் அஜீத்திற்கு வாலி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த எஸ் ஜே சூர்யா, அஜித் படத்தில் நடித்துள்ள காட்சியின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
ஆசை படத்தில் ஆட்டோ ஒட்டியுள்ள எஸ் ஜே சூர்யா

தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து பின்னர் ஹீரோவான பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனரான எஸ் ஜே சூர்யாவும் ஒருவர். எஸ் ஜே தமிழில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார். அதிலும் இவர் இயக்கிய குஷி மற்றும் வாலி திரைப்படங்கள் வேற லெவலில் வெற்றிபெற்றது. 2000 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் “குஷி”. இந்த படத்தை ஏ. எம். ரத்னம் அவர்கள் தயாரித்து உள்ளார். மேலும், இந்த படத்திற்கு இசையமைத்தவர் தேவா.

- Advertisement -

இந்த படத்தில் விஜய்,ஜோதிகா,விஜயகுமார்,நிழல்கள் ரவி, மும்தாஜ்,விவேக், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்திற்கு முன்பாகவே எஸ் ஜே சூர்யா அஜித்தின் வாலி படத்தை இயக்கி இருந்தார். மேலும், எஸ் ஜே சூர்யா முதன் முதலில் திரையில் தோன்றியது குஷி படம் தான் என்று பலரும் நினைத்திருந்தனர்.

ஆனால், இந்த படத்திற்கு முன்பாவே மூன்று படத்தில் சிறு சிறு காட்சியில் தோன்றியுள்ளார் எஸ் ஜே சூர்யா. இவர் முதன் முதலில் திரையில் தோன்றியது 1988 ஆம் ஆண்டு வெளியான நெத்தியடி என்ற படத்தின் மூலம் தான். அந்த படத்தை தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான ‘கிழக்கு சீமையிலே’ படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதே போல இவர் அஜித்தின் படத்திலும் சிறு காட்சியில் நடித்துள்ளார். ஆம், 1993 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் அஜித் நடித்த ஆசை படத்தில் தான் எஸ் ஜே சூர்யா ஒரு சிறு காட்சியில் நடித்துள்ளார். இந்த படத்தில் சுவலக்ஷ்மி ஆட்டோவில் பயணிக்கும் ஒரு காட்சியில் ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ளார் எஸ் ஜே சூர்யா. அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஸலாக இதோ அந்த புகைப்படம்

Advertisement