வல்லவன் படத்தில் நடித்துள்ள பிக் பாஸ் 2 பிரபலம். இதுவரை இவரை நோட் செய்துள்ளீர்களா ?

0
102918
vallavan

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் வைஷ்ணவி. வைஷ்ணவி அவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் பிரபல எழுத்தாளர் சாவியின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆர் ஜே வாக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் வைஷ்ணவி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் இவரை பற்றி பலருக்கு தெரியாது. மேலும், இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தான் மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும், சர்ச்சைகளும் காணப்படுவது வழக்கம். அதில் வைஷ்ணவி அவர்கள் சக போட்டியாளர்களிடம் சற்று அதிகமாக சர்ச்சைகளுக்கு உள்ளானார். இதன் மூலம் இவர் ரசிகர்கள் மனதில் நன்றாக பதிந்து விட்டார் என்றே சொல்லலாம்.

இதையும் பாருங்க : வாலி படத்திற்கு முன்பாகவே அஜித் படத்தில் நடித்துள்ள எஸ் ஜே சூர்யா. இதோ அறிய புகைப்படம்.

- Advertisement -

பெரும்பாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெரும்பாலான போட்டியாளர்கள் சினிமாவில் நடித்து பிரபலமானவர்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சிலருக்கு பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. ஆனால், வைஷ்ணவி இது வரை எந்த படத்திலும் நடித்தது கிடையாது என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னும், பின்னும் இவர் நடித்தது இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் வைஷ்ணவி அவர்கள் சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் ஒரு சிறு காட்சியில் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வைஷ்ணவி அவர்கள் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றதாம். அப்போது அவருக்கே தெரியாமல் வல்லவன் படத்திற்காக எடுத்த காட்சியில் வைஷ்ணவி வந்துள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு கடந்த ஆண்டு விளக்கம் அளித்து இருந்தார் வைஷ்ணவி.

-விளம்பரம்-

தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கடந்த ஆண்டு தான் வைஷ்ணவி அவர்கள் தன் காதலன் அஞ்சான் ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அஞ்சான் ரவி என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார் வைஷ்ணவி. அஞ்சான் ரவி அவர்கள் ஆஸ்திரேலியாவில் விமானியாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய திருமண புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வந்தது.

Advertisement