துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

0
1055
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ஒரு கார் பிரியர் என்பதைவிட கார் வெறியர் என்றே கூறலாம். சினிமாவில் நடிக்கவருவதற்கு முன்பாக பார்முலா கார் ரெஸர் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார் நடிகர் அஜித் குமார்.  

-விளம்பரம்-

அஜித் ஒரு கார் பிரியர் என்பதால் அவரது படத்திலும் கார் அல்லது பைக் ஓட்டும் மாஸ் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்று விடும். நடிகர் அஜித்தை போல வேறு யாராலும் கார் ஓட்ட முடியாது என்று அஜித்தின் நெருங்கிய நண்பர்கள் பல பேர் கூறி நாம் கேட்டுளோம்.

இதையும் பாருங்க : கவினுக்கு காதலி இருக்கிறார்.! அடித்துக் கூறும் கவின் படத்தின் தயாரிப்பாளர்.! யார் தெரியுமா? 

- Advertisement -

சமீபத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆளில்லா விமான தயாரிக்கும் தக்ஷா என்ற குழுவின் ஆலோசகராக பணியாற்றி அண்ணா பல்கலை கழகத்திற்கு பெருமை சேர்த்தார் அஜித். இத்தணை திறமை கொண்ட அஜித் கடந்த சில நாட்களாக துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் இந்த வார இறுதியில் கோயம்பத்தூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அஜித் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் பயிற்ச்சியும் மேற்கொண்டாராம். அஜித் நீண்ட வருடங்களுக்கு பின்னர் இதுபோன்ற ஒரு போட்டியில் கலந்து கொள்ள போவதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். தற்போது அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் ஈடுபட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement