கவினுக்கு காதலி இருக்கிறார்.! அடித்துக் கூறும் கவின் படத்தின் தயாரிப்பாளர்.! யார் தெரியுமா?

0
6084
kavin
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் சின்னத்திரை நடிகரான கவின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகர் கவின்.

-விளம்பரம்-
Related image

சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டைய்யன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த கவினுக்கு இல்லத்தரசிகள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் பெரும் பிரபலம் ஏற்பட்டது. அந்த பிரபலத்தை வைத்து கவினுக்கு நட்புன்னா என்ன தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மூன்று வருட இடைவெளிக்கு பின்னர் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை பெற்றது.

இதையும் பாருங்க : உன்கிட்ட தனியா சொல்ல இஷ்டம் இல்ல சாக்க்ஷி.! கவின் விஷயத்தில் வெடித்த சண்டை.! 

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை பெற்றிருந்த கவின், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதே போல கவின் அணைத்து பெண்களையும் மாமா பெண்களை போன்று தான் பார்க்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், கவினுக்கு காதலி இருகிறார் என்பது உண்மை என்று கவினின் ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தை தயாரித்த ரவீந்தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், கவினுக்கு காதலி இருப்பது எனக்கு நன்றாக தெரியும். அவரை நான் நேரில் பார்த்தது இல்லை, ஆனால் கவின் அந்த பெண்ணுடன் மணிக்கணக்கில் பேசிகொண்டே தான் இருப்பார்.

-விளம்பரம்-

கவின் தற்போது பிக் பாஸ் வீட்டில் நன்றாக கேம் ஆடுகிறார். நீங்கள் பார்ப்பது அவரது உண்மையான முகமே கிடையாது. சாக்க்ஷியிடம் அவர் ஒரு முறை கத்தினாரே அது தான் அவருடைய உண்மையான முகம். அவர் தன்னை சுற்றி கேமராவின் பார்வை இருக்க வேண்டும் அவர் தெளிவாக கேம் விளையாடுகிறார் என்று கூறியுள்ளார் ரவீந்தர்.

Advertisement