2.5 கோடி எல்லாம் இல்லை, கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் அஜித் வழங்கியது இத்தனை லட்சம் தான்.

0
1915
ajith
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இதனால் தமிழ் நாடு உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கும் அமுலுக்கு வந்துள்ளது. இந்த கொடிய வைரஸால் பல லட்சம் பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க, பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் கொரோனா அதிகமாக பாதித்து வரும் குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

அதே போல தமிழ் நாட்டிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய அனுமதிப்பட்டு முதல் ஆக்சிஜன் லோடும் புறப்பட்டுவிட்டது. இது ஒருபுறம் இருக்க, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், தமிழகத்திற்கு நிதியுதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது,

இதையும் பாருங்க : தேன்மொழி சீரியலில் ஜாக்லினின் அப்பாவாக நடித்து வந்த நடிகர் ரமேஷ் காலமானார்.

- Advertisement -

கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மருத்துவ மற்றும் நிதி நெருக்கடியை தமிழகம் சந்தித்து வருகிறது. உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். உலக தமிழர்களே உயிர் காக்க நிதி வழங்குங்கள். மக்கள் அளிக்கும் நிதி கொரோனா தடுப்பு பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். திடீர் அவசர செலவினங்களுக்காக தாராளமாக நிதியுதவி வழங்குங்கள். புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், தமிழகத்திற்கு நிதியுதவி செய்யுங்கள். 

நிதியுதவி செய்பவர்களின் விவரங்கள் பொதுவெளியில் அறிவிக்கப்படும் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் சூர்யா முதலமைச்சரை சந்தித்து 1 கோடி ரூபாய் நிதி வழங்கி இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித், தற்போது ரூ.25 லட்சம் ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கி உள்ளார். முதலில் அவர் 2.5 கோடி வழங்கியதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அஜித் 25 லட்சம் கொடுத்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டே நடிகர் அஜித் கொரோனா நிதி அளித்து இருந்தார். பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் என நிதியுதவி என்று மொத்தம் 1.25 கோடி ரூபாய் அளித்து இருந்தார். அஜித் நிதியுதவி அளித்த பின்னர் தான் நடிகர் விஜய் அவரை விட 5 லட்ச ரூபாய் கூடுதலாக நிதி கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement