அஜித்தின் அடுத்த படத்துக்கு இசையமைப்பாளர் இவர்தான்.! படக்குழு அறிவிப்பு

0
663
Ajith

அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்கள் தற்போது இயக்குனர் சிவா இயக்கி வரும் ”விஸ்வாசம் “படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் ‘மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

Ajith-Next-To-Be-Bankrolled-By-Boney-Kapoor_SECVPF

ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள அஜித் படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனத்திடம் ஒரு பாலிவுட் படத்தின் ரீமேக் உரிமையும் உள்ளதாம். அந்த படத்தின் கதையில் தான் அஜித் நடிக்கவிருக்கிறார் என்ற கூறப்பட்டு வருகிறது.

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இந்தியில் கடந்த 2016 ஆம் ஆண்டு அமிதா பச்சன் நடிப்பில் வெளிவந்த “பிங்க்” படத்தை தான் ரீ-மேக் செய்யயுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் சின்ஹா படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Yuvan Shankar Raja

இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா அஜித்தின் “தீனா” படம் தொடங்கி “பில்லா, ஏகன், ஆரம்பம், மங்காத்தா” போன்ற பல படங்களில் இசையமைப்பாளாக பணியாற்றிவிட்டார். அஜித்தின் பெரும்பாலான மாஸ் தீம் ம்யூசிக்கிற்கு யுவனை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது தான் உண்மை. நீண்ட இடைவேளைக்கு பின்னர் அஜித் படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ள செய்து பெரும் எதிரிபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.