புனித் ராஜ்குமாரின் அகால மரணம், விஜய்க்கு முன்பாக முந்திய அஜித் – தல எப்போதும் தங்க மனசு தான்.

0
18793
puneeth
- Advertisement -

கன்னட சினிமா உலகில் பவர் ஸ்டாராக திகழ்ந்து வந்த புனீத் ராஜ் குமார் மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அஜித் தன் இரங்கலை தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவரை ரசிகர்கள் எல்லோரும் பவர்ஸ்டார் என்று தான் செல்லமாக அழைப்பார்கள். தமிழ் சினிமாவில் விஜய் எப்படியோ, அதே போல் கன்னட சினிமா உலகில் மிகப் பிரபலமானவர் புனித் ராஜ்குமார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களில் பணிபுரிந்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.

-விளம்பரம்-

இவர் கடைசியாக நடித்த ‘யுவரத்னா’ படம் மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது என்று சொல்லலாம். இன்று காலை புனித் ராஜ்குமார் அவர்கள் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக புனித் ராஜ்குமார் அனுமதிக்கப்பட்டிருந்தார்.புனித் ராஜ்க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து இருந்தார்கள். இவருடைய உடல் நலம் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று பிரபலங்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் பாருங்க : csk அணி வீரரின் தங்கையை தமிழில் நாயகியாக களமிறக்கும் நயன் – விக்கி. (இவங்க செம Crush மெட்டிரியலாச்சே)

- Advertisement -

புனித் ராஜ் குமாரின் மறைவிற்கு பாலிவுட் துவங்கி டோலிவுட் வரை உள்ள பல்வேரு நடிகர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித், புனித் குமாரின் இறப்பிற்கு இரங்கலை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பதிவிட்டுள்ள அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் ‘புனித் ராஜ்குமாரின் அகால மரணச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இந்தத் துயரைக் கடக்கும் வலிமை கிட்டட்டும்’ என்று அஜித் கூறியுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார். எந்த வித சமூக வலைதள பக்கத்திலும் இல்லாத அஜித் புனித் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துவிட்டார். ஆனால், ட்விட்டரில் இருக்கும் விஜய் இன்னும் எந்த ஒரு இரங்கலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement