csk அணி வீரரின் தங்கையை தமிழில் நாயகியாக களமிறக்கும் நயன் – விக்கி. (இவங்க செம Crush மெட்டிரியலாச்சே)

0
1651
nayan
- Advertisement -

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார் நயன்தாரா. என்னதான் நயன் ஒரு பிஸியான நடிகையாக இருந்து வந்தாலும் விக்னேஷ் சிவனால் ஒரு வெற்றிகமான இயக்குனராக வளம் வர முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தனர். நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்கள்.

-விளம்பரம்-

இறுதியாக இந்த தயாரிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் நல்ல வரவேற்பை தொடர்ந்தது. இதை தொடர்ந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, கவினை வைத்து ‘ஊர்க்குருவி’ என்ற படத்தை தயாரிக்க இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பின் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், சென்னை அணியின் தங்கை ஒருவரை தான் நாயகியாக கமிட் செய்துள்ளனர்.

இதையும் பாருங்க : ‘சில்க் சுமிதா வெறும் கவர்ச்சி பொருள் மட்டும் தானா ? சில்க் சுமிதாவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய ராஜு.

- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது பிரபலமானவர் தான் இந்த மால்டி சஹர். அந்த சீசனில் சென்னை மற்றும் மும்பை அணியின் போட்டியின் போது அணைத்து ரசிகர்களையும் கவர்ந்தது இவரின் அழகான ரீக்ஷன்கள் . ஒவ்வொரு முறை சென்னை அணியை ஆதரித்து அவர் செய்த க்யூடான செயல்கள் ரசிகர்களை கவர்ந்தது.இவர் வேறு யாரும் இல்லை சென்னை அணி வீரரான தீபக் சஹரின் தங்கை தான் இந்த மால்டி சஹர்.

ஐபிஎல் 2018 ஆம் தொடருக்கு பின்னர் தீபக் சஹரை விட அதிக பிரபலமடைந்தது இவர் தான். அதன் மூலம் இவர் ஒரு சில இந்தி படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் ‘ரௌடி பிக்சர்ஸ்’ பிக்சர்ஸ் தயாரிப்பில் விநாயக் என்பவர் இயக்க இருக்கும் WalkingTalkingStrawberryIcecream என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார். இதனை விக்னேஷ் சிவனும் தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement