அஜித்துடன் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்.! சொன்னது அஜித்தின் நெருங்கிய சொந்தகாரர்.!

0
879
Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் ஒரு உச்ச நட்சத்திர நடிகராக விளங்கி வருகிறார். இவ்ருடன் நடித்துவிட மாட்டோமா என்று பல்வேறு நடிகர் நடிகைகளும் ஏங்கி கொண்டிருக்க அஜித்துடன் நடிக்க மாட்டேன் என்று அஜித்தின் மச்சானே தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

அஜித்தின் மனைவியான ஷாலினியின் சகோதரரான ரிச்சர்ட் தான் இவ்வாறு கூறியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வருகிறார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை துவங்கினார்.

- Advertisement -

அதன் பின்னர் தமிழில் காதல் வைரஸ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் யுகா, வைரம், பெண் சிங்கம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இன்னும் பலரும் அறிந்திடாதா ஒரு நடிகராகவே இருந்து வருகிறார். தற்போது வச்சி செஞ்சுட்டான் என்கிற படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை ஆண்டாள் ரமேஷ் என்பவர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிகையாளரை சந்தித்த ரிச்சர்ட் பேசியதாவது திருமண வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் உள்ளிட்ட பல பிரச்னைகளை பேசும் படமாக இருக்கும். நல்ல கதைக்களுக்காக காத்திருக்கிறேன். தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். நேரம் வரும்போது எனக்கான இடம் கிடைக்கும். அஜித்துடன் கண்டிப்பாக இணைந்து நடிக்க மாட்டேன். குடும்பம் வேறு, சினிமா வேறு என்கிறார்.

-விளம்பரம்-

Advertisement