தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவருடன் ஜோடியாக நடித்துவிட மாட்டோமா என்று பல நடிகைகளும் ஏங்கி கொண்டு தான் இருக்கின்றனர். அஜித்துடன் நடித்த நடிகைகள் அனைவரும் அவர் ஒரு ஜென்டில் மேன் ஷூட்டிங்கில் மிகவும் மரியாதையாக தான் நடந்துகொள்வார் என்று சொல்லி தான் கேள்வி பட்டு இருக்கிறோம் ஆனால், அஜித்திடமே திட்டு வாங்கியுள்ளார் இந்த நடிகை.
அது வேறு யாரும் இல்லை பிரபல நடிகையான மாளவிகா தான். தமிழ் சினிமாவில் 90ஸ் லகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் மாளவியா அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர். .அந்த படத்திற்கு கதாநாயகியாக மீண்டும் அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே என்ற படத்திலும் நடித்தார்.
இதையும் பாருங்க : கொரோனாவால் கில்லி பட நடிகர் காலமானார் – இவரது கதாபாத்திரத்தை மறக்க முடியுமா?
அறிமுகமான சில காலத்திலேயே அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்த நடிகை என்ற பெருமையை பெற்ற நடிகைகளில் இவரும் ஒருவர்.இதனால் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.அஜித்துடன் நடித்த பின்னர் ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, கந்தா கடம்பா கத்திரவேலா, பேரழகன், வசூலராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, வியாபாரி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என்று பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.
வீடியோவில் 1 : 52 நிமிடத்தில் பார்க்கவும்
இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாளவிகா பேசுகையில், அந்த படத்தில் நடிக்கும் போது குஷ்பூவை தவிர யாரையும் எனக்கு தெரியாது. அந்த படத்தில் நடிக்கப்பெல்லாம் ஓகே தான். ஆனால், டான்ஸ் அவ்ளோ கஷ்டமா இருந்தது. எப்போதும் என்னை திட்டிகொண்டே இருப்பார், என்ன பண்ற பாடிய ஏன் அவ்ளோ லூசா விட்ற டய்ட்டா இருக்கனும் அவ்ளோ திட்டினார் அஜித். ஆனால், அவர் மிகவும் இனிமையான மனிதர். அவரை எனக்கும் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார் மாளவிகா.