அஜித்தின் மொபைல் இவ்வளவு பழைய மாடலா.! விவரம் உள்ளே..!

0
1112
ajith-kumar-simple
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்றதும் நம் நினைவில் முதலில் வருவது அஜித் தான். அஜித் எந்த அளவிற்கு ஒரு மாஸ் ஹீரோ என்பது நமக்கு தெரியும் அதே போன்று அவர் ஒரு பைக் ப்ரியார் என்பதும் நம் அனைவருக்கும் தெரிந்த விடயம் தான்.

thalaajith

 

- Advertisement -

ஆனால் என்ன தான் அஜித்தின் தீவிர ரசிகர் என்றாலும் அவரை பற்றி தெரிந்திடாத விடயமும் பல உள்ளது. நடிகர் அஜித் ஒரு சிம்ப்பிளான நபர் தான். அவரது வீட்டில் இருக்கும் போது கூட அவர் மிக எளிமையாகத்தான் இருப்பார். அதே போன்று என்னதான் மாஸ் ஹீரோவாக இருந்தாலும் அஜித் என்றுமே ஆடம்பரத்தையோ, விளம்பரத்தையோ விரும்பியது இல்லை.

நடிகர் அஜித்திற்கு பைக் மற்றும் காரை தவிர வேறு எந்த விடயத்திலும் நாட்டம் இருந்தது இல்லை. அஜித் அவர்களின் எளிமையை பற்றி பல நடிகர்கள் கூறி நாம் கேட்டிருக்கிறோம். இந்நிலையில் அல்டிமேட் ஸ்டார் அஜித்தை பற்றி பிரபல நடன இயக்குனர் பிருந்தா ஒரு சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார்.

brinda

நடிகர் என்றாலே அவர்கள் பயன்படுத்தும் பொருள் எப்போதும் ஆடம்பரமாக தான் இருக்கும். அதிலும் குறிப்பாக அவர்கள் பயன்படுத்தும் மொபைல் போன்கள் கண்டிப்பாக விலை உயர்ந்ததாக தான் இருக்கும். ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகரான அஜித் இன்னமும் கூட ஒரு சாதாரண நோக்கியா மொபைல் போனைத்தான் பயன்படுத்தி வருகிறார் என்று நடன இயக்குனர் பிருந்தா, சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ajith

இந்த காலகட்டத்தில் சாதாரண மக்கள் கூட ஐ போன், ஆண்ட்ராய்டு என்று விலையுயர்ந்த போன்களை பயன்படுத்தும் போது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் இவ்வளவு எளிமையாக இருப்பதென்பது அவர்களது ரசிகர்களுக்கே ஒரு ஆச்சர்யம் தான்.

Advertisement