தளபதியை போல தல நட்ட மரக்கன்று – வைரலாகும் புகைப்படங்கள்.

0
1023
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் இந்த தலைமுறைக்கு பின்னர் விஜய் அஜித் தான் தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்கள் என்று கூறலாம். இதேபோல விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் இருவரும் மாறி மாறி தங்களது ஹீரோக்களுக்கு ஆதரவாக பேசுவது ஒன்றும் புதிதான விஷயம் ஒன்றும் இல்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் மரக்கன்று நட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகபரவியதை தொடர்ந்து அஜித் மரக்கன்று நட்ட புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் மகேஷ்பாபு. சமீபத்தில் நடிகர் மகேஷ் பாபு தனது பிறந்தநாளை இருந்தார். இதற்கு பல்வேறு பிரபலங்களும் மகேஷ் பாபுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மகேஷ் பாபு நன்றிகளை தெரிவித்து இருந்தார். தனது பிறந்தநாளுக்கு மரக்கன்று ஒன்றை நட்டிருந்தார் மகேஷ் பாபு. இதுகுறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்த மகேஷ் பாபு, பிறந்த நாளைக் கொண்டாட இதை விட சிறந்த வழி இருக்கிறதா என்ன.

- Advertisement -

கிரீன் இந்தியா சேலஞ். இதை நான் ஜூனியர் என்டிஆர், நடிகர் விஜய், நடிகை சுருதிஹாசன் போன்றவர்களுக்கு கொடுக்கிறேன். என்று கூறியிருந்தார். இந்த மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய் தனது வீட்டில் மரக்கன்று நட்டு அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.

மேலும், விஜய்யை தொடர்ந்து நடிகை சுருதி ஹாசனும் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று மரக்கன்றை நட்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் அஜித்தும் இதே போல மரக்கன்று நட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், விஜய்க்கு முன்பாகவே அஜித் மரக்கன்றை நட்டுள்ளார் என்று அஜித் ரசிகர்கள் மார்தட்டி கொண்டுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement