அஜித் முதல் ஜக்கி வரை, எப்படி பைக்கில் வேறு நாடுகளுக்கு சுற்றூலா போக முடியுது ? அதுக்கு எவ்ளோ செலவாகும் ? யாரெல்லாம் போக முடியும் தெரியுமா ?

0
628
ajith
- Advertisement -

பொதுவாகவே எல்லோருக்கும் வெளிநாடு சுற்றுலா செல்வது பிடித்தமான ஒன்று. இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு விமானத்தின் மூலம் சுற்றுலா செய்வது பொதுவான நடைமுறையாக உள்ளது. ஆனால், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பயணம் செய்வதையே சுற்றுலாவாக கொண்டாடும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. நடிகர் அஜித், ஜக்கி வாசுதேவ் போன்ற போன்ற பல நடிகர்கள் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கண்டம் விட்டு கண்டம் பயணிக்கின்றனர். பெரும்பாலும் தற்போது ரயில், விமானம் ஆகியவற்றைத் தவிர்த்து பைக்கில் செல்வதை தான் பலரும் விரும்புகிறார்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு சொந்த வாகனத்தில் பயணம் செய்யும்போது என்னென்ன செய்ய வேண்டும்? இதற்கு எவ்வளவு செலவு ஆகும்? என்பதைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு ஒருவர் தன்னுடைய சொந்த வாகனத்தில் பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு பல அனுமதிகளைப் பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஒரு மனிதனுக்கு எப்படி பாஸ்போர்ட் இருக்கிறதோ? அதேபோல் அந்த வாகனத்திற்கு ஒரு பாஸ்போர்ட் இருக்கிறது. அதன் பெயர் CARNET DE PASSAGE. இந்தியாவைப் பொருத்தவரை Federation of Indian Automobile Associations என்ற அமைப்பு தான் இந்த அனுமதியை தரமுடியும். இந்த அனுமதியை பெற சில விதிமுறைகளும் உண்டு.

- Advertisement -

சொந்த வாகனத்தில் பயணிக்க விதிமுறை:

அந்த குறிப்பிட்ட வாகனத்தை ஓட்டுபவரின் பாஸ்போர்ட்டில் அவர் கடந்து செல்லக்கூடிய நாடுகளின் விசாவை அச்சடிக்க வேண்டும். மேலும், 20 காலி பக்கங்கள் தேவை என்பதில் தொடங்கி அவர் எந்தெந்த நாடுகளுக்கு செல்கிறாரோ அங்கு செல்லுபடியாகும் வகையில் சர்வதேச ஓட்டுநர் உரிமம், காப்பீடு போன்றவை கண்டிப்பாக இருக்க வேண்டும். இதற்கு CARNET DE PASSAGE, TRIP TICKET என்று அழைக்கிறார்கள். இதனைப் பெற வேண்டும் என்றால் அந்த குறிப்பிட்ட வாகனத்தின் சந்தை மதிப்பு என்னவோ? அதே போல் 200 சதவீத தொகையை டெபாசிட் தொகையாக கொடுக்க வேண்டும். இந்த டெபாசிட் வங்கி வரைவோலையாக, காசோலையாகவோ அல்லது வங்கி உத்தரவாதம் வழங்க வேண்டும்.

TRIP TICKET பற்றிய தகவல்:

மேலும், இந்த 200 சதவீத தொகையை முன்பணமாக வாங்குவதற்கு ஒரு முக்கிய காரணமும் உண்டு. ஏன்னா, TRIP TICKET உடைய கால அளவு ஒரு வருடம் என்று கொடுக்கப்பட்டிருந்தால் அந்த ஒரு ஆண்டுக்குள் மீண்டும் அந்த வாகனம் இந்தியாவிற்குள் வந்து விட வேண்டும். இல்லை என்றால் அந்த வாகனத்தை இந்தியாவில் இருந்து ஒரு நாடு இறக்குமதி செய்து கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும். அப்படி இறக்குமதி செய்யப்பட்டதாக கணக்கில் கொள்ளப்படும் பட்சத்தில் அதற்கான இறக்குமதி வரி டிக்கெட் எடுத்தவர்கள் டெபாசிட் தொகையை பயன்படுத்திக் கொள்வார்கள். அந்த வாகனம் கடைசியாக எந்த நாட்டில் இருக்கிறதோ அந்த குறிப்பிட்ட நாட்டிற்கு அந்த வரி தொகையை செலுத்தி விடுவார்கள்.

-விளம்பரம்-

டெபாசிட் செய்ய காரணம்:

இதற்கு தான் முன்னாடியே டெபாசிட் வாங்குகிறார்கள். மேலும், இந்த TRIP TICKETடை இந்தியாவில் பெறாமல் சென்று விட்டால் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்திவிட்டு தான் செல்ல வேண்டும். அந்த பணத்தை மீண்டும் பெறுவதற்கு நீண்ட காலமாகும். ஒரு சில சமயம் பெறாமல் போக கூடிய சூழ்நிலை வரும். இந்த சிக்கலைத் தவிர்க்க தான் எந்த நாட்டிலிருந்து செல்கிறோமோ அந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்திவிட்டு செல்வது பாதுகாப்பானது. மேலும், சுற்றுலாவை முடித்து விட்டு சரியான நேரத்திற்குள் வந்து வாகனத்தை காண்பித்து செலுத்திய முன் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இந்தியா-லண்டன் செல்ல ஆகும் செலவு:

உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து லண்டனுக்கு சாலை மார்க்கமாக செல்ல வேண்டும் என்றால் சுமார் 18 நாடுகளை கடந்து 20 ஆயிரம் கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். சொந்த வாகனத்தில் செல்லும்போது ஏற்படும் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு இந்தியாவில் இருந்து லண்டன் மற்றும் சிங்கப்பூர் செல்ல பேருந்து உள்ளது. அதோடு இந்தியாவில் இருந்து லண்டனுக்கு பேருந்தில் செல்ல ஒரு ஆளுக்கு ஒரு டிக்கெட்டின் விலை வரிகளோடு சேர்த்து 23 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய். இந்தியாவில் இருந்து லண்டன் வரை செல்லும் பயணத்திற்கு மட்டுமே இந்த தொகை. லண்டனிலிருந்து மீண்டும் இந்தியா வர தனியாக சொந்த செலவில் நாம் விமான டிக்கெட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் செல்ல ஒவ்வொரு அளவிலான டிக்கெட் மதிப்பு இருக்கிறது

Advertisement