தல அஜித்தின் Real சூரரைப் போற்று Moment – 21 ஆண்டுகளுக்கு பின் வெளியான மாஸ் சம்பவம்.

0
3586
surya
- Advertisement -

சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்தின் ப்ரோமஷனுக்காக நடிகர் சூர்யா, ஒரு தனி விமானத்தை வாடகைக்கு எடுத்து அதில் அகரம் அறக்கட்டளையில் படிக்கும் 100 ஏழை மாணவர்களை 30 நிமிடங்கள் விமானத்தில் வானில் பயணிக்க இருந்த சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்தது. முதல் முறையாக விமானத்தில் பயணித்த அனுபவத்தை எண்ணி அந்த 100 குழந்தைகள் பட்ட சந்தோசத்திற்கு அளவில்லாமல் இருந்தது.

-விளம்பரம்-

சூர்யாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு மழை பொலிந்து இருந்தனர். ஆனால், இப்படி ஒரு சம்பவத்தை 21 ஆண்டுகளுக்கு முன்னரே சத்தமில்லாமல் செய்துள்ளார் அஜித். தமிழ் சினிமாவில் தல என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவரது பெயரைச் சொன்னதும் நம் நினைவிற்கு முதலில் வருவது இவரது சிம்ப்ளிசிட்டி தான். ஆனால், இவர் செய்யும் உதவிகள் அனைத்தும் வெளியில் தெரிவது கிடையாது என்று பல்வேறு பிரபலங்கள் கூறி நாம் கேட்டு இருக்கலாம்.

இதையும் பாருங்க : கதவில் தொங்கிய கர்ட்டைனை சுற்றிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள ஆத்மிகா.

- Advertisement -

அந்த வகையில் அஜீத் செய்துள்ள இந்த சம்பவமும் இத்தனை ஆண்டுகள் வெளியில் தெரியாமல் தான் இருந்திருக்கிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் அஜித், அதுவரை விமானத்தில் பயணிக்காத 60 ஏழை குழந்தகளை விமானத்தில் பயணிக்க செய்துஉள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பிறவி வருகிறது. இந்த சம்பவம் 21 ஆண்டுகளுக்கு பின் தான் வெளியாகி இருக்கிறது என்பது தான் ஆச்சரியம்.

சரியாக சொல்லப்போனால் ‘தீனா’ திரைப்படம் வந்த சமயம் அது. அப்போது அஜித் மிகப்பெரிய மாஸ் நடிகர் எல்லாம் கிடையாது. தீனா திரைப்படத்திற்கு பின்னர் தான் இவருக்கு தல என்றுகூட பெயர் வந்தது. ஆனால், அப்போதே இப்படி ஒரு சிறப்பான சம்பவத்தை சத்தமில்லாமல் செய்து இருக்கிறார் அஜித். ஆனால் இத்தனை ஆண்டுகள் இது எப்படி வெளிவராமல் இருந்தது என்பதுதான் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement