பிடித்துப்போன பைக், விமான டிக்கெட்டை கேன்சல் செய்து பைக்கிலேயே இத்தனை கிலோமீட்டர் வந்துள்ள அஜித்.

0
4466
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித் குமார். ரசிகர்கள் அன்போடு ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித், 1993-ஆம் ஆண்டு வெளி வந்த ‘அமராவதி’ என்ற படத்தில் தான் முதன் முறையாக கதையின் நாயகனாக நடித்தார். அந்த படத்தினை இயக்குநர் செல்வா இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘பவித்ரா, ஆசை, வான்மதி, கல்லூரி வாசல், காதல் கோட்டை, உல்லாசம், காதல் மன்னன், வாலி, அமர்க்களம், சிட்டிசன்’ போன்ற பல படங்களில் நடித்தார் ‘தல’ அஜித்.

-விளம்பரம்-

‘தல’ அஜித்துக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

- Advertisement -

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் ‘தல’ அஜித்துடன் இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணி அமைத்திருக்கும் படம் தான் ‘வலிமை’. இந்த படத்தில் அஜித்துக்கு செம மாஸான போலீஸ் ரோல் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, அஜித் சில படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இந்த படம் அவருக்கு ரொம்பவும் ஒரு ஸ்பெஷலான படமாக இருக்குமாம்.

valimai

‘தல’ அஜித்தின் திரை உலக வாழ்வில் ‘வலிமை’ திரைப்படம் அவருக்கு 60-வது படமாம். பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய ‘மங்காத்தா’ அஜித்தின் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘வலிமை’ படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்து கொண்டிருக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இது அதிக பொருட்செலவில் தயாராகி கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

இதன் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்தபோது, படத்தில் ஒரு பைக் சேஸிங் காட்சி படமாக்கப்பட்டது. அந்த பைக் அஜித்துக்கு மிகவும் பிடித்து விட்டதாம். ஹைதராபாத் ஷெடியூல் முடிந்த பிறகு, சென்னைக்கு அந்த பைக்கிலையே தான் 650 கிலோமீட்டர் டிராவல் செய்து வந்தாராம் அஜித். அவருக்கென போடப்பட்டிருந்த விமான டிக்கெட்டை கூட கேன்சல் செய்ய சொல்லிட்டாராம் அஜித். உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement