தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் தல அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளி வந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீப காலமாகவே தல அஜித்தின் நடிப்பில் வரும் படங்கள் எல்லாம் ப்ளாக் பஸ்டர் தான். மேலும், நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் இணைந்து தல அஜித்தை வைத்து வலிமை படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
அதுமட்டும் இல்லாமல் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படுத்திலும் பணியாற்றுகிறார்கள் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்து உள்ளார்கள். சமீப காலமாகவே தல அஜித் அவர்கள் படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்தில் காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். அதோடு ஹீரோயினியும் போலீஸ் கேரக்டர் தான் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது.
இதையும் பாருங்க : வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு மீண்டும் ஒன்றாக இணைந்து நடனமாடிய குமரன்-சித்ரா. வைரலாகும் வீடியோ இதோ.
மேலும், இந்த படத்திற்காக தல அஜித் அவர்கள் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளார். இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த படம் இயக்குனர் வினோத்தின் சொந்த கதையை மையமாகக் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வலிமை படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தான் தொடங்கப்பட்டது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படம் 2020 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். வலிமை படத்தில் இருந்து ஏதாவது ஒரு அப்டேட் வராதா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
இந்நிலையில் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் வலிமை படத்தின் சூட்டிங்கில் தற்போது தல அஜித் அவர்கள் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு செம மாஸாக சண்டை போடும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்து தல ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து கொண்டு உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் வலிமை படம் அதிரடி ஆக்ஷன் கலந்த திரைக்கதையை உருவாக்கி வருவது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இந்த படத்தின் சண்டைக்காட்சி தொடங்கி உள்ளது. சமீப காலமாக தல அஜித் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் நல்ல பெயரை வாங்கித் தருகிறது. அந்த வகையில் இந்தப் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.