போட்றா வெடிய, திருவிழா நாளில் வெளியாக இருக்கும் வலிமை – போனி கபூர் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு.

0
612
valimai
- Advertisement -

வலிமை படத்தின் ரிலீஸ் குறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டு இருக்கிறார். விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார் நடிகர் அஜித். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே டீம் தற்போது இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தின் பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில் படத்தின் பெயரை தவிர வேறு எந்த ஒரு அப்டேட்டும் வராமல் இருந்தது.

-விளம்பரம்-
Image

நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர்.இப்படி ஒரு நிலையில் வரமுறை இல்லாமல் தேவையில்லாத இடத்தில் எல்லாம் அப்டேட் கேட்கும் ரசிகர்களால் கடுப்பான அஜித் தனது ரசிகர்களின் செய்யல்பாட்டால் வருந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தக்க நேரத்தில் வலிமை அப்டேட் வரும் என்று கூறினார் அஜித்.

இதையும் பாருங்க : விக்ராந்தின் சர்வைவர் நிகழ்ச்சியால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் இருந்து நீக்கப்பட்டாரா லட்சுமி ?

- Advertisement -

கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக அதுவும் தள்ளிப்போனது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை மாதம் வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து படத்தின் பாடலும் வெளியானது.

Image

அஜித் ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் ட்ரைலரை நோக்கி காத்துகொண்டு இருக்கும் நிலையில் இந்த படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதே பொங்களுக்கு தான் விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாக இருக்கிறது. இறுதியாக கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா படம் நேருக்கு நேர் மோதியது. தற்போது 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் அஜித் – விஜய் படங்கள் மோத உள்ளது.

-விளம்பரம்-
Advertisement