விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றும், டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வரும் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. இந்த சீரியல் முழுக்க முழுக்க அண்ணன், தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்ட கதை ஆகும். இதில் அண்ணன், தம்பிகள் அனைவரும் சேர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். மூர்த்தி என்பவர் தான் குடும்பத்திற்கு பெரிய அண்ணன்.
மேலும், மூர்த்தி மற்றும் அவர்களின் சகோதர்களுக்கு அம்மாவாக நடித்து வந்தவர் தான் லக்ஷ்மி அம்மாள். இவரின் உண்மையான பெயர் ஷீலா. தற்போது இந்த சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் மூர்த்தியின் அம்மாவாக நடித்த லட்சுமி அவர்களை இறந்ததைப் போல் காட்டப்பட்டது. இதுகுறித்து நடிகை ஷீலா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று கூட அளித்திருந்தார்.
அதில் அவர் கூறியது, நான் இந்த தொடரில் மூன்று வருடமாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால், என்னிடம் யாரும் இந்த தொடரில் இருந்து நீக்கப்படுவது குறித்து சொல்லப்படவில்லை. பசங்க தான் அடிக்கடி உங்களை நாங்கள் ரொம்ப மிஸ் பண்ணுவோம் என்று சொல்லியிருந்தார்கள். இப்போதான் என்னிடம் இந்த மாதிரியான காட்சிகள் வைத்து எடுக்கப் போவதாக சொன்னார்கள். கதைக்காக இந்த மாதிரி காட்சிகள் எடுக்கப்படுவது வழக்கம் தானே.
எனக்கு சீரியல் இருந்து விலகியது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகை ஷீலா இந்த சீரியலில் இருந்து விலக்கப்பட்டதற்கு அவருடைய மகன் விக்ராந் தான் காரணம் என்று ஒருபக்கம் சோசியல் மீடியாவில் கருத்துக்கள் பரவி வண்ணம் உள்ளன. நடிகர் விக்ராந்தின் அம்மா தான் நடிகை ஷீலா. பிக் பாஸ் போட்டியில் கலந்துகொள்ள நடிகர் விக்ராந் இடம் விஜய் டிவி தரப்பில் பேச்சுவார்த்தை நடப்பட்டது. அதற்கு விக்ராந் ஓகே என்று சொல்லி இருந்தார்.
பின் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக விக்ராந் கலந்து கொண்டார். இதனால் தான் நடிகை ஷீலா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருந்து விலக்க காரணம் என்று ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.