கொரோனா பிரச்சனை தலை தூக்கிய பின்னர் பெரிய நடிகர்களின் படங்கள் கூட OTT யில் வெளியாக துவங்கிவிட்டது. கடந்த ஆண்டு சூரரை போற்று படம் வெளியான நிலையில் அதை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படம் கூட நேரடியாக OTT யில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் நேரடியாக திரையரங்கில் தான் வெளியானது. ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது.தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் வசூலிலும் சாதனை படைத்தது. 10 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜனவரி 29 ஆம் தேதி இந்தியா உட்பட 240 நாடுகளில் வெளியாக இருப்பதாக அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது..ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் திரையரங்குகளில் வெளியான வெறும் 16 நாட்களில் வெளியாவது இதுவே முதல்முறை. ‘மாஸ்டர்’ தியேட்டரில் ரிலீஸாகி 45 நாள்களுக்குப்பிறகுதான் ஓடிடியில் வெளிவரும் என முன்னர் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : எந்த வயசுல அந்த இடத்துல வளையம் குத்துனீங்க – ரசிகரின் கேள்விக்கு நச் பதில் அளித்த ஸ்ருதி.

Advertisement

இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து அஜித்தின் வலிமை படத்தை OTT தளங்கள் விலை கொடுத்து வாங்க போட்டி போட்டு வருகின்றனர். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் மற்றும் எச் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தை போனி கபூர் தான் தயாரித்து இருக்கிறார், ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்துவருகின்றன.

மற்றொருபக்கம் தயாரிப்பாளர் போனி கபூர் தியேட்டர் விற்பனை தொடர்பாக விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துவிட்டார். ஆனால், விஜய்யின் ‘மாஸ்டர்’ படம்போல் இல்லாமல் தியேட்டரில் ரிலீஸாகி 35 நாட்களுக்குப்பிறகே ‘வலிமை’ ஓடிடி-க்கு வரும் என்று விநியோகஸ்தர்களிடம் உறுதியளிக்கப்பட்டிருக்கிறதாம். மேலும், ‘வலிமை’ படம் ஆகஸ்ட்டில் தியேட்டர்களில் மட்டுமே பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தின் பர்ஸ்ட் விரைவில் வெளியாக இருக்கிறது.

Advertisement
Advertisement