விசுவாசம் பட ஷூட்டிங் செட் எங்கு நடக்கிறது தெரியுமா..? செட்டின் மதிப்பு இத்தனை கோடியா..?

0
477
visvasam
- Advertisement -

கடந்த மாதம் தமிழ் தரிப்பாளர்கள் நடத்தி வந்த ஸ்ட்ரைக் காரணமாக பல்வேறு படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது சில நாட்களுக்கு முன்னர் ஸ்ட்ரைக் நிறைவடைந்த நிலையில் அணைத்து படப்பிடிப்புகளும் மும்மரமாக நடந்து வருகிறது .இந்நிலையில் அஜித் நடித்துவரும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் 7ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

visvasam

இயக்குனர் சிவா மற்றும் அஜித் 4வது முறையாக இணையும் விசுவாசம் படம் அஜித் ரசிகர்களிடேயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த படத்திற்கான ஷூட்டிங் அடுத்த மாதம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது.

- Advertisement -

இதற்க்காக பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களின் படப்பிடிப்புகள் எடுக்கபட்ட ராமோஜி ஸ்டுடியோவில் செட் அமைக்கப்பட்டுள்ளதாம் . இதற்காக ராமோஜி ஸ்டுடியோவில் ஒரு கிராமத்தை போன்ற செட் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.இந்த செட்டிற்காக மட்டும் மொத்தம் 5.2 கோடி என கூறப்படுகிறது. இதனால் படத்தில் கிராம கதைகளும் இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

ramiji studio

30 நாட்கள் நடக்கவுள்ள இந்த படப்பிடிப்பில் நயன்தாரா மற்றும் படத்தில் உள்ள முக்கிய நடிகர்கள் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. மேலும் வரும் தீபாவளிக்குள் எப்படியாவது இந்த படத்தை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று இயக்குனர் சிவா மும்மரம் காட்டி வருகிறார் .

Advertisement