தென்னிந்திய சினிமாத் திரை உலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக அல்டிமேட் ஸ்டார் ஆக அஜித் குமார் கலக்கி கொண்டிருக்கிறார். இவர் தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.அஜித் குமார் அவர்கள் சினிமா துறையில் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்களம், பில்லா, மங்காத்தா, விசுவாசம், நேர் கொண்ட பார்வை என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதனாலேயே சினிமா துறை உலகம் இவரை “அல்டிமேட் ஸ்டார்” என்றும் “தல” என்றும் தான் அழைப்பார்கள். சினிமா உலகத்தில் படங்கள் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் வீரனுக்கு சகஜமான ஒன்று தான்.அந்த வகையில் அஜித் அவர்களின் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான விவேகம் படம் குறித்துப் பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.

மேலும், சிவா இயக்கிய இத்திரைப்படத்தில் விவேக் ஓபராய் ,காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோரும் நடித்துள்ளனர். அஜித் குமார் அவர்கள் தன் வாழ்வில் பார்க்காத வெற்றி தோல்விகளே இல்லை. சினிமா துறையில் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு காரணம் அவருடைய விடா முயற்சியும், அவர் வாழ்வில் கண்ட பல தோல்விகளும் தான் என்று சொல்லலாம். அதே சமயத்தில் ப்ளூ சட்டை மாறன் போல பல பேர் படங்கள் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் செய்பவர்களும் இணையங்களில் இருக்கிறார்கள். அப்படி சர்ச்சையில் சிக்கிய படம்தான் விவேகம். இந்த படம் திரையரங்கில் நன்றாக ஓடி, வசுலையும் பெற்று தந்தாலும் கூட இந்த படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் கூறிவந்தார்கள்.

இதையும் பாருங்க : அந்த சிலை அருகில் இருந்து புகைப்படம் எடுக்க வேண்டும்.! முகெனுக்கு இப்படி ஒரு ஆசையா.!

Advertisement

இந்த படம் குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு கலவையான விமர்சனங்களை தெரிவித்தவர்கள் நெட்டிசன்கள். அது மட்டும் இல்லைங்க இந்த படத்தை கன்னட மொழியிலும் டப் செய்யப்பட்டு உள்ளார்கள். கன்னட மொழியில் இந்த படத்தை கமாண்டர் என்று பெயர் வைத்து வெளியிட்டார்கள். மேலும், இந்த படத்தை சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடுயூபில் கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியிட்டார்கள். இந்தப் படம் யூடுயூபில் வந்து ஒரு மாதத்திற்குள்ளே ஒரு மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்தது. தற்போது வரை பல லட்சத்தையும் கடந்து சாதனை படமாக மாறி உள்ளது. இதனால் தல அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும்,ஏன்? தான் விமர்சனம் செய்தீங்க என கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

விவேகம் படம் ஒரு திரில்லிங் ஆக்ஷன் காட்சிகளோடு எடுக்கப்பட்ட படம். அது மட்டும் இல்லைங்க இந்த படத்தில் நவீன தொழில்நுட்பங்களை பற்றியும் இயக்குனர் கூறியுள்ளார்.மேலும்,இது ராணுவ துறைக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் வகையில் இருந்தது இப்படத்தின் கதை. ஊருக்குள்ள நாலு பேர் சொன்ன அதே தான் எல்லாரும் பின்பற்று வாங்க .அந்த மாதிரி ஒருத்தர் விமர்சனம் பண்ண தொடங்கியவுடன் கதை எப்படி? என்ன? ஏதுனு அலசல் செய்யாமல் விமர்சனம் செய்ய எடுத்துட்டாங்க. இப்பதான் புரிஞ்சிருக்கும் போல அனனைவருக்கும் விவேகம் படத்தின் கதையின் ஆழம். ரசிகர்களுக்கு இன்னொரு ஒரு இனிப்பான செய்தி என்று பார்த்தால் அது அஜித் அவர்களின் “தல 60” என்ற பெயரில் அவருடைய அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்ற தகவல் இணையங்கள் வெளியானது.இந்த படத்தில் புதிய லூக்குடன் அஜித் தோன்றுகிறார்.இதனால்,தல ரசிகர்கள் சந்தோஷத்திலும்,உற்சாகத்திலும் உள்ளனர்.

Advertisement
Advertisement