அஜித்தின் பைக்கை வித்து தான் வீட்டு வாடகை கட்டினேன் – தீனா பட நடிகர் பேட்டி.

0
876
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். சினிமாவையும் தாண்டி இவருக்கு பைக், ரேஸ் கார் ரேஸ் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். மேலும், இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கூட கலந்து கொண்டு இருக்கிறார். இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக பைக் அல்லது கார் ஓட்டும் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்றுவிடும்.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட நடிகர் அஜித் தனது நண்பருடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலையில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சீரிப்பாய்ந்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க அஜித் ஓட்டிய பைக்கை விற்று வீட்டு வாடகையை கொடுத்துள்ளார் பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான சம்பத் ராம். நடிகர் சம்பத் ராமிற்கு அறிமுகம் தேவையில்லை.

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் வில்லனாக நடித்து இருக்கிறார் நடிகர் சம்பத்ராம். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானது முதல்வன் படத்தில் மூலம்தான். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்தாலும் இவருக்கு பெரும் அடையாளத்தைக் கொடுத்தது தீனா திரைப்படம் தான். அந்த படத்தில் அஜித்தின் கேங்கில் அடியாளாக நடித்திருப்பார் நடிகர் சம்பத் ராம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சம்பத்ராம் ஒரு சுவாரசியமான தகவலை கூறியுள்ளார்.

இடையில் நான் ஒரு முக்கியான ஹீரோ பெரிய தயாரிப்பாளர் படத்தில் கமிட் ஆனேன். ஆனால், நல்ல கேரக்டர் என்பதால் சம்பளம் இல்லை என்றார்கள் நானும் நல்ல கேரக்டர் என்று ஓகே சொல்லிவிட்டேன். ஆனால், படப்பிடிப்புகள் துவங்காததால் 3,4 மாசம் வேலை இல்லாமல் இருந்ததால் தீனா படத்தில் அஜித் சார் ஓட்டிய பைக்கை விற்று தான் வீட்டு வாடகை கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement