புத்தகத்திற்கு மரியாதை கொடுங்க. அஜித் பட நடிகை வெளியிட்ட வீடியோ. கழுவி ஊற்றிய ரசிகர்கள்.

0
11796
Kanika
- Advertisement -

கடந்த மூன்று மாதங்களாக ஒட்டுமொத்த உலகையும் கதி கலங்க வைத்து இருக்கிறது இந்த கொரோனா வைரஸ். இந்தியாவில் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனாவினால் 3691 பேர் பாதிக்கப்பட்டும், 99 பேர் பலியாகியும் உள்ளனர். அதிலும் தமிழகத்தில் 485 பாதிக்கப்பட்டும், 3 பேர் உயிர் இழந்தும் உள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு சுழலும் ஏற்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

இந்த சூழலில் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.மேலும், திரைப் பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து விதமான படப்பிடிப்பு வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

இதனால் பிரபலங்கள் அனைவரும் வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக உடற்பயிற்சி, வீட்டு வேலை, ஜோக்ஸ், புத்தகம் படிப்பது,சமையல் போன்ற பல்வேறு வேலைகளை செய்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபலங்கள் பல பேர் சோசியல் மீடியாவில் தங்களுடைய உடற்பயிற்சி வீடியோக்களை தான் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கனிகா அவர்களும் தன்னுடைய உடற்பயிற்சி வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில் நடிகை கனிகா அவர்கள் புத்தகங்களை வைத்து உடற்பயிற்சி செய்து உள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் ‘புத்தகங்களுக்கு மரியாதை கொடுங்கள், இது ஒன்றும் விளையாட்டு பொருள் அல்ல’ என்று கிண்டலடித்த படி கமெண்ட் போட்டு உள்ளார். இதை பார்த்த நடிகை கனிகா அவர்கள் உடனடியாக அவருக்கு பதில் அளித்து உள்ளார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியிருப்பது, நான் என்ன புத்தகத்தை எரித்தேனா? புத்தங்கள் மீது முத்திரை பதித்தேனா? புத்தகத்தை தவறாக ஏதாவது விஷயத்திற்கு உபயோகப்படுத்தினேனா? நானும் ஒரு படித்த பெண் தான். ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக நொண்டிச் சாக்குகளை எல்லாம் கமெண்ட் போடாதீர்கள் என்று கோபமாக பதிலளித்துள்ளார். தற்போது இந்த கமெண்ட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை கனிகா. இவருடைய இயற்பெயர் திவ்யா வெங்கட சுப்பிரமணியம். திரைஉலகிற்காக இவர் கனிகா என்று பெயரை மாற்றிக் கொண்டார். இவர் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆட்டோகிராஃப், வரலாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். பின் இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பெரியதாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றவுடன் திருமணம் செய்து கொண்டார். இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் பின்னணி பாடகி, தொகுப்பாளினி ஆவார்.

Advertisement