‘அடுத்த பைக் ரேசர் ரெடி’ – தன் ஹெல்மெட்டை மகனுக்கு போட்டு போஸ் கொடுத்ததற்க்கே இந்திய அளவில் ட்ரெண்ட்டான குட்டி தல.

0
614
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகின் அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களின் மகனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அது மட்டும் இல்லாமல் இப்போது ட்ரெண்டிங் நியூஸ் இது கூட சொல்லலாம். அதுவும் ரெண்டு பேரும் அப்படியே அஜித்,ஷாலினி மாதிரி ஜெராக்ஸ் காப்பி ஆக இருக்கிறார்கள் கூட கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். சினிமா உலகில் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் நடிகர் அஜித் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். நடிகர் அஜித்துக்கு என ஒரு தனி ரசிகர் படையை உள்ளது. அந்த அளவிற்கு மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர்.

-விளம்பரம்-
Image

அஜித்,ஷாலினி நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் ‘அமர்க்களம்’. இந்தப் படத்திற்கு பிறகு அஜீத்தும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். பின் இவர்களுக்கு 2008 ஆம் ஆண்டு அனோஷ்கா என்ற அழகான மகளும், 2014ம் ஆண்டு சுட்டித்தனமான ஆத்விக் என்ற மகளும் பிறந்தார்கள். எப்பவுமே நடிகர் அஜித் அவர்கள் பொது நிகழ்ச்சிகளிலும், சினிமா பட புரமோஷன்களிலும் கலந்து கொள்வதில்லை.

இதையும் பாருங்க : அப்போ ரோஷினி சீரியலிருந்து விலகுவது உண்மை தானா ? இயக்குனர் போட்ட வைரல் பதிவு இதோ.

- Advertisement -

அதோடு அவர் தன் குழந்தைகளையும் மீடியா பக்கம் கொண்டு வருவதில்லை. சொல்லப் போனால் மீடியா வாசனையே இல்லாமல் வளர்த்து வருகிறார் என்று கூட சொல்லலாம். ஆனால், அஜித் குடும்பத்தை விமான நிலையத்திற்கு வரும் போது, ஷாப்பிங் செல்லும்போது,மக்கள் கூடும் இடங்களுக்கு வரும் போது தான் பார்க்க முடியும். அதுவும் குடும்பத்துடன் போட்டோ எடுத்துக்கொள்ளலாம் எனக் கேட்டால் அஜித் செல்பி எடுத்து தர மறுத்து விடுவார். அப்படி மீறி புகைப்படம் வருவது ரொம்ப அரிதான ஒன்று.

அஜித் குடும்பத்துடன் இருக்கும் மாதிரி வரும் புகைப்படங்கள் எல்லாம் அவர் எடுப்பதில்லை. ரசிகர்கள் எடுத்து இணையங்களில் வெளியிடுவது தான். இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித், தன்னுடைய பைக் ஹெல்மெட்டை தன் மகனுக்கு அனுவித்து அவருடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ‘The Lion King’ல் வரும் முஃபாசா மற்றும் சிம்பாவுடன் ஒப்பிட்டு அடுத்த ரேஸிங் சாம்பியன் என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து ட்விட்டரில் ‘குட்டிதல’ என்ற ஹேஷ் டேக்கும் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.

Advertisement