அப்போ ரோஷினி சீரியலிருந்து விலகுவது உண்மை தானா ? இயக்குனர் போட்ட வைரல் பதிவு இதோ.

0
727
barathi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் பாரதி கண்ணம்மா ஒன்று. இந்த சீரியல் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்றுகொண்டிருக்கின்றது. அதுமட்டும் இல்லாமல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் வகிக்கும் சீரியல்களில் ஒன்றாக பாரதிகண்ணம்மா திகழ்ந்து கொண்டிருக்கிறது. மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ஏன்னா, அந்த அளவிற்கு பாரதி கண்ணம்மா சீரியல் இல்லத்தரசிகளின் பேவரட் சீரியல்களில் ஒன்றாக உள்ளது.

-விளம்பரம்-
bharadhi-kannamma-cinemapettai09

இந்த சீரியலை பிரவீன் அவர்கள் அற்புதமாக இயக்கி வருகிறார். இந்த சீரியலில் கதாநாயகனாக அருண் பிரசாந்தும், கதாநாயகியாக ரோஷினி ஹரிபிரியனும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென்று சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் பாரதிகண்ணம்மா சீரியல் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருவது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சீரியலில் இருந்து கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரோஷினி விலகுவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : `ரோஜா’ சீரியலின் இளம் நடிகைக்கு கொரோனா – இனி அவரின் கதாபாத்திரம் இனி என்னவாகும்?

- Advertisement -

ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் ஏதும் வெளியாகவில்லை. மேலும், ரசிகர்கள் பலரும் தங்கள் இணையதளத்தில் ஹீரோயின் மாற்றம் செய்ய வேண்டாம் என்று போஸ்டர்களை உருவாக்கி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பாரதிகண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மறுப்பு தெரிவிப்பது போல் ஒரு ஸ்மைலி இமோஜி ஒன்றை போட்டு கண்ணம்மா என்று பதிவிட்டிருக்கிறார்.

Barathi Kannamma | 22nd to 27th February 2021 - Promo - YouTube

இதை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் அதிர்ச்சியில் உள்ளார்கள். இதிலிருந்து ஹீரோயினி மாற்றம் செய்வது மட்டுமல்லாமல் கண்ணம்மா கதாபாத்திரமே இல்லாதது போல் தெரிகிறது என்று கூறி வருகிறார்கள். மேலும், இந்த சீரியல் இயக்குனரின் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. உண்மையாலுமே ரோஷினி சீரியல் இருந்து விலகுவாரா? இல்லையா/ என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement