நாடு முழுவதும் கொரானாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மத்திய, மாநில அரசாங்கம் குழம்பிப் போயுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் விட்டுவைக்காமல் கொரானாவின் தாக்கம் பரவி வருகிறது. இந்நிலையில் விஜய் படத்தின் இயக்குனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ’தமிழன்’. இந்த படத்தை இயக்குனர் மஜீத் இயக்கினார்.

இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் விஜய், பிரியங்கா சோப்ரா, ஆஷிஷ் வித்யார்த்தி, ரேவதி, நாசர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மையமாக கொண்டது. சமீபத்தில் இவர் நடிகை சதாவை வைத்து டார்ச்லைட் என்ற படத்தை இயக்கினார்.

Advertisement

இந்நிலையில் இயக்குனர் மஜீத் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரை வட பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இவரது சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் செலவு செய்தார். பின் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் ஆனபோது மருத்துவமனையில் 4 லட்சத்துக்கும் அதிகமான பணம் கட்ட வேண்டும் என்று சொன்னர்கள்.

ஆனால், அவரால் சிகிச்சைக்கான பணத்தைக் கட்ட முடியாமல் தவித்தார். மேலும், தனக்கு திரையுலகினர் உதவும்படி மஜித் வேண்டு கோள் விடுத்தார். அதை பார்த்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் அவரது மருத்துவ செலவுகளை ஏற்றார். இப்போது மஜித் முழுவதும் குணமாகி வீடு திரும்பி உள்ளார். இந்த நிலையில் தயாரிப்பாளர் ராஜேஷுக்கு இயக்குனர் மஜீத் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement