நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் தமிழகத்தில் தற்போது இந்த வைரஸ் தீவிரமடைந்து உள்ளது.கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க தடுப்பூசிகள், மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகிறது. தமிழகத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் கொரோனா தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இப்படி ஓரு நிலையில் கொரோனாவின் கோர தாண்டவத்தால் அஜித் பட குழந்தை நட்சரத்தின் குடும்பத்தில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. சென்னை ராயபுரத்தில் சேர்ந்த முபாரக் மற்றும் யாஸ்மின் தம்பதியின் மகன் ஆலம் இவர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனின் பேரனாக நடித்து வருகிறார். அதேபோல அஜித் நடித்துவரும் இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : மீண்டும் நைஸ்ஸான ரைசாவின் முகம் – மீண்டும் பழைய நிலைக்கு வர இதை தான் செய்தாராம். அதுவும் 5 வாரம் ஆச்சாம்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் ஆழம் தந்தை முபாரக் கடந்த ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தினால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி விட்டார். இதனிடையே கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையால் பாதிக்கப்பட்டு இவர்கள் குடும்பத்தினர் பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ளார்கள.இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்னர் ஆலமிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவரது தந்தை மற்றும் தாய்க்கும் கொரோனா பரவியுள்ளது. 9 மாத கர்ப்பிணியாக இருந்த ஆலம்மின் தாயார் யாஸ்மின் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காததால் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.

இப்படி ஒரு நிலையில் அவருக்கு தொற்று மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பல லட்சம் தேவைப்பட்டது இப்படி ஒரு நிலையில் ஆலமுடன் தொடரில் நடித்த பெங்களூரைச் சேர்ந்த நவீன் என்பவர் சமூக வலைத்தளத்தில் ஆலம் குடும்பத்தினர் படும் கஷ்டத்தை பற்றி கூறி நிதி திரட்டி இருக்கிறார். பலரும் நிதி அளிக்க 9 லட்சம் திரட்டி உயிருக்கு போராடி வந்த யாஸ்மின் மருத்துவ சிகிச்சைக்கு பணத்தையும் அனுப்பியிருக்கிறார். ஆனால் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட யாஸ்மின் உயிரிழந்து விட்டார். இருப்பினும் சிசேரியன் மூலம் குழந்தையை மட்டும் காப்பாற்றி இருக்கிறார்கள்.

Advertisement

பச்சிளம் குழந்தையுடன் மனைவியின் உடலை எடுத்துச் செல்லக் கூட பணம் இல்லாமல் மருத்துவமனையில் ஆலமீன் தந்தை தவித்து உள்ளார். இந்த தகவலை அறிந்து நண்பர்கள் சிலர் உதவியால் ஆலமீன் தாயார் யாஸ்மின் உடல் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. தாய் இறந்து மூன்று நாட்கள் ஆகியும் கொரோனாவால் மருத்துவமனையில் இருக்கும் தனது தாய் இறந்த செய்தி கூட தெரியாமல் இருந்துவருகிறார். அதேபோல இந்தியன் 2 வலிமை படத்தில் நடித்ததற்காக சம்பள பாக்கி மூன்றரை லட்சம் வழங்க வேண்டும் என்று ஆளும் குடும்பத்தினர் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

Advertisement
Advertisement