மீண்டும் நைஸ்ஸான ரைசாவின் முகம் – மீண்டும் பழைய நிலைக்கு வர இதை தான் செய்தாராம். அதுவும் 5 வாரம் ஆச்சாம்.

0
1289
Raiza
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. என்னதான் 4 சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரைசாவும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் பல்வேறு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் ரைசாவின் கண்களுக்கு கீழ் வீக்கம் இருப்பதை கண்டு ரசிகர்கள் பலரும் ஷாக் ஆனார்கள். இதுகுறித்து தெரிவித்துள்ள ரைசா, சமீபத்தில் சாதாரண பேஷியல் போடுவதற்காக பைரவி செந்தில் என்பவரை சந்தித்ததாகவும், அப்போது அவர் தான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் எனக்கு தேவையில்லாத விஷயங்களை செய்ததால் இப்படி ஆகிவிட்டது.

இதையும் பாருங்க : மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன் – சமந்தாவின் வெப் தொடருக்கு எதிராக சீமான் அறிக்கை.

- Advertisement -

இதை தொடர்ந்து நான் அவரிடம் பேச நினைத்தால் என்னை அவர் சந்திக்க மறுக்கிறார். ஊழியர்களிடம் கேட்டால் கூட அவர் வெளியூரில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள் என்று பரிதாபத்துடன் பகிர்ந்து இருந்தார். இந்த சிகிச்சைக்காக 1,27,000 ரூபாய் செலவு செய்ததாகவும் கூறிய ரைசா, இது சம்பந்தமாக கோடி கணக்கில் நஷ்ட ஈடு கேட்டு ரைசா வக்கீல் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பி இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-155.jpg

அதே போல பைரவி செந்திலும் பதிலுக்கு ரைசாவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் ரைசா தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் முகத்தில் இருந்த வீக்கம் சரியாகி மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி இருந்தார் ரைசா.

-விளம்பரம்-

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ரைசா, எனக்கு நல்ல வாழ்த்துக்களை அனுப்பும் அனைவருக்கும், மிக்க நன்றி, நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். எனது முந்தைய பயங்கரமான அனுபவத்திற்குப் பிறகு நான் @charissma beauty_clinic க்குச் சென்றேன், எங்கே என் முகத்தில் உள்ள தேவையற்ற அனைத்து பொருட்களையும் கரைக்க உதவியதுடன், எனக்கு பொருத்தமான தோல் ஆலோசனைகளையும் கொடுத்தனர். முழுமையாக குணமடைய எனக்கு 5 வாரங்கள் பிடித்தன, இறுதியாக நான் மீண்டும் என்னைப் போலவே உணர்கிறேன் என்று பதிவிடுள்ளார்.

Advertisement