வழக்கமாக அட்லீ தான் காபி அடிப்பாரு. இது என்ன அட்லீ படத்துல இருந்து தல பட டைட்டிலை காபி அடிச்சிருகாங்க.

0
41145
Theri
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர் ஆனவர் அட்லீ. இவர் முதலில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதற்கு பிறகு அட்லீ அவர்கள் “ராஜா ராணி” என்ற திரை படத்தின் மூலம் இயக்குனரானார். அதனைத் தொடர்ந்து இவர் விஜய்யை வைத்து தெறி , மெர்சல் ஆகிய இரண்டு படங்களையும் இயக்கினார். தற்போது மூன்றாவது முறையாக
தளபதி விஜயுடன் இணைந்து பிகில் படத்தை உருவாக்கினார். இந்த படம் வெளி வந்து மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை பெற்றது. இது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-
Image result for Theri poster

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் அட்லி இயக்கும் படம் எல்லாமே காப்பியடிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் ஒரு சர்ச்சை இருந்து கொண்டு தான் இருக்கின்றது. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு அட்லி இயக்கிய படம் தெறி. இந்த படத்தில் விஜய், எமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்திருந்தார். இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் அவர் தான் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் போஸ்டர் வந்த போது இந்த போஸ்டரில் “வலிமை மற்றும் சூரரைப்போற்று” என்று பெயர் இருந்து உள்ளது. எப்போதுமே அட்லீ தான் காப்பி அடிப்பார் என்று கூறுவார்கள். இந்நிலையில் அஜீத் நடிக்கும் படத்திற்கு வலிமை என்றும், சூர்யா நடிக்கும் படத்திற்கு சூரரைப் போற்று என்றும் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு படத்தின் தலைப்பையும் தெறி படத்திலிருந்து தான் எடுக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக பிரதிபலித்து கொண்டு இருக்கும் தல அஜித்தின் “வலிமை” படம் குறித்து பல தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. கடந்த வருடம் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் அள்ளித் தந்தது. நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் இணைந்து தல அஜித்தை வைத்து உருவாகி வருகிற படம் தான் “வலிமை”.

இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது. இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும். இந்த திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர் ரசிகர்கள். அதோடு இந்த படத்தில் அஜித்துடன் நடிக்க மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்தும் வருகிறார்கள். இந்த வலிமை படம் 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். அதே போல் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படம் “சூரரை போற்று”. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகியுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.

Advertisement