வரலாறு படத்தில் குட்டி வில்லன் அஜித்தாக வந்த பையன் – இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

0
2712
varalaru
- Advertisement -

கெத்து காட்டும் ஹீரோக்கள், க்யூட் ரியாக்‌ஷன்களால் மனசை அள்ளும் ஹீரோயின்களைத் தாண்டி சில ஃப்ரேம்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள் குட்டி நட்சத்திரங்கள். பெருசுகளையே கலாய்க்கும் கவுன்ட்டர் டயலாக்காக இருந்தாலும் சரி, பார்க்கும் எல்லாரையும் கண் வியர்க்க வைக்கும் சென்டிமென்ட் காட்சிகளாக இருந்தாலும் சரி, அடடே இந்தச் சுட்டி செமையா நடிக்குதே!’ என நம்மை ஓ போட வைத்த பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் இருக்கின்றனர். மீனா துவங்கி அவரது மகள் பேபி அனிகா வரை பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவில் பிரபலம் தான்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-38-818x1024.jpg

அந்த வகையில் இந்த குழந்தை நட்சத்திரமும் பிரபலம் தான். அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வரலாறு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அஜித், அசின், கனிகா, சுஜாதா, ராஜேஷ் என்று பலர் நடித்து இருந்தனர். வரலாறு படத்திற்கு முன்னர் அஜித் நடித்த ஆஞ்சநேயா ஜனா ஜி பரமசிவன் திருப்பதி போன்ற பல்வேறு படங்கள் தொடர்ந்து தோல்வி படமாக அமைந்து இருந்தது.

- Advertisement -

ஆனால, வரலாறு திரைப்படம் அஜித்திற்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்து இருந்தது. இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து அஜித்தின் மார்க்கெட் ஏத்தி விட்டது என்று சொன்னால் அதற்கு மிகை ஆகாது. இந்த படத்திற்கு முதலில் காட் பாதர் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்த அஜித் தந்தை அஜித்தையே கொள்ளத் துடிப்பார். இந்த படத்தில் அப்பா அஜித் மற்றும் மகன் ஜீவா கதாபாத்திரம் தான் முக்கிய கதாபத்திரமாக இருக்கும்.

This image has an empty alt attribute; its file name is 1-168.jpg

மேலும், அந்த ஜீவா கதாபாத்திரத்தின் சிறுவயது அஜித்தாக நடித்தது தான் இந்த சிறுவன். இவருடைய பெயர் சச்சின் லக்ஷ்மன். குழந்தை நட்சத்திரமான இவர், கிரி, சத்யா போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துளளார். சமீபத்தில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில், அடையாளம் தெரியாத அளவிற்கு ஆளே மாறியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

-விளம்பரம்-
Advertisement