துணிவு படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த ஷாலினி – ரிசல்ட் என்ன ?

0
179
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித் மற்றும் விஜய் என இரு பெரும் நடிகர்களின் படங்களான வாரிசு மற்றும் துணிவு என இரண்டுமே ஒரே நாளில் மோதவிருக்கின்றன. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் இருவரின் படங்களும் ஒன்றாக வரும் பொங்கல் 11ஆம் தேதி ஒன்றாக வெளியாவதினால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதனால் கண்டிப்பாக திரையரங்குகள் கலைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

இந்த நிலையில் சமீபத்தில் வாரிசு மற்றும் துணிவு படங்களில் ட்ரைலர்கள் வெளியான நிலையில் அதற்க்கான சர்ச்சைகளுக்கும் சென்று கொண்டிருக்கிறது. பாடலின் சிறிய வார்த்தை முதல் ட்ரைலரில் வெளியாகவும் ஒரு நொடி காட்சி வரையில் அலசி ஆராய்ந்து விமர்சித்தும், பாராட்டியும் வருகின்றனர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள். இவை ஒரு புறம் இருக்க மறுபுறம் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சைகளுக்கும் வந்தபடியாகத்தான் இருக்கின்றன.

- Advertisement -

மேலும் வாரிசு மற்றும் துணிவு என இரு படங்களும் ஒரே நாளில் நாளை மறுநாள் 11ஆம் தேதி வெளியாவதினால், படத்திற்கான பிராத்தனைகளும், ப்ரோமோஷன்களும் வெகு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எல்லா இடங்களிலும் வாரிசு மற்றும் துணிவு பட போஸ்டர்கள் என்று தமிழ் நாடே வரும் 11ஆம் தேதி வெளியாகும் அந்த இரண்டு படங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் படத்தின் முதல் காட்சி எப்போது என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் முதல் காட்சி குறித்து இரு பட குழுவினரும் முறையே அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தனர். அந்த வகையில் வாரிசு பட விநியோகஸ்தர் லலித் குமார் வாரிசு படத்தின் சிறப்பு காட்சியை அதிகாலை 1 மணிக்கு வெளியிட திட்டமிட்டார். அதற்கான ஏற்பாடுகளும் நடந்தனர். ஆனால் வாரிசு மற்றும் துணிவு என இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் வெளியிட வேண்டாம் என்று திரையரங்க உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் இருப்பதினால் படத்தை ஒரே நேரத்தில் வெளியிட்டால் ரசிகர்கள் மத்தியில் பிரச்சனை ஏற்ப்படும் என்பதினால் காவல் துறை சாரிப்பிலும் கோரிக்கை விடுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் துணிவு படத்தை 11ஆம் தேதி அதிகாலை 1மணிக்கும், வாரிசு படத்தை காலை 4மணிக்கும் வெளியிட விநியோக நிறுவனங்கள் சம்மதித்தனர்.

இப்படி ஒரு நிலையில் துணிவு படத்தின் சிறப்பு காட்சியை அஜித்தின் மனைவி சென்னையில் உள்ள 4 ப்ரேம்ஸில் என்ற சிறப்பு திரையரங்கில் பார்த்து ரசித்தார். அவருடன் சில முக்கிய நபர்களும் இருந்தனர். மேலும் சிலர் அஜித்தின் மனைவி ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோடு சிறப்பு காட்சியை அஜித்துடன் பார்த்த சிலர் ட்விட்டர்ட் பக்கத்தில் படம் சிறப்பாக வந்திருக்கிறது என்றும், நிச்சயம் பொங்களுக்கு வெற்றிபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement