இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியது ‘2.O’ திரைப்படம். இந்திய அளவில் அதிக பொருட்ச்செலவில் உருவாகிய இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேப்பை பெற்று பல்வேறு வசூல் சாதனைகளை செய்தது.
சிவாஜி,எந்திரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கூட்டணியில் “2.0” திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக தயாராகிஇருந்தது . இந்த படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சன் , இந்தி நடிகர் அக்சய் குமார், ரியாஸ் கான் போன்ற பல நடிகர்கள் நடித்தனர்.
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இந்தி நடிகர் அக்சய் குமார். இந்தியில் பல ஆண்டுகளாக நடித்து வரும் இவர் படங்களில் ஸ்டண்ட் காட்சிகள் அதிகம் இடம்பெறும். சமீபத்தில் அமேசான் ப்ரைம் வீடியோஸ் தயாரிப்பில் இவர் நடிக்கும் (THE END) சீரீஸின் அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் அக்சய் குமார் தனது உடலில் நெருப்பை பற்றவைத்துக்கொண்டு மேடையில் வலம் வந்தார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, இப்படி தீயில இருக்கறத நான் பாக்கணுமா. இதுல பிழைச்சு, வீட்டுக்கு வா உன்னை கொன்னுடறேன்’ என ட்வீட் பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் ட்வீட் செய்த அக்சய் குமார், இது தான் தனக்கு பயத்தை ஏற்படுத்துகிறது என்று குசும்பாக பதிவிட்டுள்ளார்.