மனைவிக்கு வெங்காயத்தாலான கம்பலை கொடுத்த 2.0 நடிகர். வைரலாகும் புகைப்படம்.

0
2478
akshay-kumar
- Advertisement -

சமீப காலமாகவே தங்கத்தின் விலையை உயர்த்துவதை போல் வெங்காயத்தின் விலையையும் உயர்த்தி உள்ளார்கள். இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் அவர்கள் தன்னுடைய மனைவிக்கு வெங்காயத்தாள் ஆன காதணியை பரிசாக கொடுத்து உள்ளார். தற்போது இந்த நியூஸ் தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்களை செய்து வருகின்றார்கள் நெட்டிசன்கள். அது மட்டும் இல்லாமல் இந்த வெங்காயத்தின் விலை உயர்வால் பாமர மக்கள் மிகவும் அவஸ்தைக்குள்ளானார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது. இதற்கு என்ன காரணம்? என்று கூட பல பேருக்கு தெரியவில்லை.

-விளம்பரம்-

- Advertisement -

மேலும், இந்த வெங்காயத்தின் விலையை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் போட்டு கிண்டலும், கேலியும் செய்து வருகிறார்கள். அதோடு கலாய்க்கும் வகையிலும் பல பேர் பல விஷயங்களை செய்து வருகின்றார்கள். அதுமட்டுமில்லாமல் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கூட ரசிகர்கள் பரிசாக வெங்காயத்தை தான் கொடுத்து உள்ளார்கள். இதனை தொடர்ந்து மக்கள் தற்போது எல்லா விஷயத்திற்கும் வெங்காயத்தை தான் பரிசாக கொடுத்து வருகிறார்கள். ஏன் என்றால் தற்போது மிக அரிய பொருளாக வெங்காயம் மாறிவிட்டது என்றும் கூறுகிறார்கள். அதிலும் ஒருவர் வெங்காயத்தை மாலையாக கோர்த்து திருமணத்தில் அணிந்து உள்ளார். இந்த விஷயம் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டும் இல்லாமல் இந்த மாதிரி செய்வதன் மூலம் அவர்களுடைய எதிர்ப்பை அரசாங்கத்துக்கு தெரிவிப்பதாக கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் அவர்கள் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு நடிகை கரீனா கபூரும் வந்து உள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சியின் உரிமையாளர்கள் வெங்காயத்தாள் செய்யப்பட்ட காதணியை நடிகை கரீனா கபூருக்கு கொடுத்து உள்ளார்கள். ஆனால், நடிகை கரீனா கபூர் இதை பெரிதாக விரும்பவில்லை. இதை அறிந்த நடிகர் அக்ஷய் குமார் அவர்கள் கரீனா கபூரிடம் இருந்து வெங்காய காதணியை கேட்டு வாங்கிக் கொண்டார். பின் அதை தன்னுடைய மனைவிக்கு பரிசாக அளித்து உள்ளார். இது குறித்து நடிகர் அக்ஷய் குமாரின் மனைவியும், நடிகையுமான டிவிங்கிள் கண்ணா அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியது, என்னுடைய கணவர் எனக்காக வெங்காய காதணியை பரிசாக தந்து உள்ளார்.

-விளம்பரம்-

இது மிகப் பெரிய பரிசு தான். கபில் சர்மா நிகழ்ச்சியில் கரீன கபூருக்கு தான் இதை கொடுத்தார்களாம். ஆனால், அவருக்கு இதில் பெரிய அளவு ஈடுபாடு இல்லாததனால் அதை என் கணவர் எனக்காக வாங்கி வந்தார். எனக்கு இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் பிடிக்கும் என நினைத்து என்னுடைய கணவர் இது எனக்கு வாங்கி உள்ளார். சின்ன விஷயங்களாக இருந்தாலும் இந்த பரிசு என் மனதை மிகவும் கவர்ந்து உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த பதிவிற்கு கீழே பலரும் அக்ஷய்குமார் அவர்கள் தன்னுடைய மனைவிக்கு மிகவும் விலை உயர்ந்த பொருளை பரிசாக வழங்கியுள்ளார் என்றும் கூறி வருகிறார்கள். இதனால் வெங்காய விலையை கலாய்க்கும் வகையிலும், வெங்காய விலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்த செயல் உள்ளது என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement