பொன்னியின் செல்வன் குந்தவை & நந்தினி கெட்டப்பை recreate செய்த தமிழ் சீரியல் நடிகைகள் – யார் யார் பாருங்க.

0
263
aiswarya
- Advertisement -

சின்னத்திரை நடிகைகள் குந்தவி- நந்தினி கெட்டபில் போட்டோஷூட் நடத்தி இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரகுமான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : அசுரன் படம் எடுக்கறதுக்கு முன்னாடி அவர் கிட்ட ஐடியா கேட்டேன், அப்போ அவர் சொன்ன விஷயம் – திருமா குறித்து வெற்றிமாறன்.

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் சில தினங்களுக்கு முன் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என அனைவரும் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

படத்தின் வசூல்:

அதோடு படம் வெளியாகி இரண்டே நாட்களில் 150 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்தே பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் குந்தவை – நந்தினி கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சின்னத்திரை சீரியல் நடிகைகள் பொன்னியின் செல்வன் ரீ-கிரியேஷன் செய்து இருக்கிறார்கள்.

அக்ஷயா-சுவேதா:

ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அக்ஷயா. இவர் இதற்கு முன்பு பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சசிகுமார் நடிப்பில் வெளிவந்திருந்த தாரதப்பட்டை படத்திலும் இவர் நடித்திருந்தார். தற்போது இவர் சீரியல்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதேபோல் சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்வேதா.

பொன்னியின் செல்வன் ரி கிரியேஷன் :

இவரும் பிரபலமான டான்ஸர் ஆவார். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து நந்தினி- குந்தவை
போட்டோ சூட் நடத்தி இருக்கின்றனர். நந்தினி கெட்டப்பில் அக்ஷயாவும், குந்தவை கெட்டப்பில் ஸ்வேதாவும்
அலங்காரம் செய்து பொன்னியின் செல்வன் ரி கிரியேஷன் செய்து இருக்கிறார்கள். தற்போது இவர்களுடைய புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement