அசுரன் படம் எடுக்கறதுக்கு முன்னாடி அவர் கிட்ட ஐடியா கேட்டேன், அப்போ அவர் சொன்ன விஷயம் – திருமா குறித்து வெற்றிமாறன்.

0
169
asuran
- Advertisement -

அசுரன் பட ஐடியா திருமாவளவன் கொடுத்தது என்று எழுந்த சர்ச்சைக்கு வெற்றிமாறன் கொடுத்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வெற்றிமாறன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆரம்பத்தில் இவர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். அதற்கு பின் தான் வெற்றி மாறன் இயக்குனராக சினிமா உலகில் களம் இறங்கினார்.

-விளம்பரம்-
asuran

இவர் முதன் முதலாக பொல்லாதவன் என்ற படத்தை தான் இயக்கி இருந்தார். அதன் பிறகு பெரும்பாலும் வெற்றிமாறன்– தனுஷ் காம்பினேஷனில் வெளிவந்த படங்கள் எல்லாமே தாறுமாறு. இவர் ஆடுகளம், உதயம், காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். இறுதியாக தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்று இருந்தது. கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த தேசிய திரைப்பட விழாவில் தனுஷும், வெற்றிமாறனும் அசுரன் படத்திற்காக தேசிய விருது வாங்கி இருந்தார்கள்.

- Advertisement -

விடுதலை படம் பற்றிய தகவல்:

தற்போது வெற்றிமாறன் அவர்கள் நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் தான் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் காடுகளில் எடுக்கப்பட்டு வருவதால் கொஞ்சம் தாமதமாகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வெற்றிமாறன்-சூர்யா கூட்டணி:

இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். சூரி படத்தை முடித்தவுடன் தான் சூர்யா நடிக்கவுள்ள ‘வாடிவாசல்’ படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அசுரன் பட ஐடியா திருமாவளவன் கொடுத்தது என்று எழுந்த சர்ச்சைக்கு வெற்றிமாறன் கொடுத்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் 60-வது பிறந்த நாளை அவருடைய கட்சியினர் கொண்டாடி இருந்தார்கள்.

-விளம்பரம்-

விழாவில் வெற்றிமாறன் சொன்னது:

இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டிருந்தார். அப்போது நிகழ்ச்சியில் அவர் கூறியிருந்தது, திருமாவளவனை நான் இரண்டு, மூன்று சந்தர்ப்பங்களில் சந்தித்து இருக்கிறேன். அவர் மிக எளிமையான மனிதர். ஒரு அரசியல் இயக்கத்தை நடத்தி வரும் நபர் இவ்வளவு எளிமையாக இருக்க முடியுமா? என்ற ஆச்சரியம் எனக்குள் ஏற்பட்டது. நான் அசுரன் படம் எடுக்கும் முன் அது அரசியல் ரீதியாக தப்பாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அவரிடம் நேரம் வாங்கிக் கொண்டு நேரில் போய் சந்தித்தேன். அப்போது அவரிடம் இது போன்ற ஒரு நிகழ்வை எடுக்கும் போது எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கேட்டேன்.

திருமாவளவன் சொன்னது:

அதற்கு அவர், தனி மனிதர்களால் சமூகத்திற்கு ஒரு தீர்வு வரும் என்று சினிமாவில் சொல்லாதீர்கள். தொடர்ந்து அதே தவறை தான் அனைவரும் செய்கிறீர்கள் என்று குற்றஞ்சாட்டியிருந்தார். அது மட்டும் இல்லாமல் ஒரு அமைப்பாய் உங்கள் கதைக்குள்ள திரளுங்கள் என்று சில ஐடியாக்களை தந்தார். ஆனால், படம் எடுத்து முடித்த பின் பார்த்த அவர் அதே குற்றச்சாட்டுகளை சொன்னார். காரணம், சினிமாவில் சில விஷயங்களை தவிர்க்க முடியாது என்று வெற்றிமாறன் கூறியிருந்தார். இப்படி இவர் கூறி இருக்கும் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement