ஜல்லிக்கட்டில் களம் இறங்கிய சூரியின் காளை – வென்றதா ? தோற்றதா ? இதோ வீடியோ.

0
474
soori
- Advertisement -

வீரம் விளையும் மதுரையில் பொங்கல் திருவிழாவின் போது நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண உலககின் பல இடங்களில் இருந்து இருந்து மக்கள் வருகின்றனர். கடந்த 2017ஆம் சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டு இரவு பகல் பாராமல் போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டிற்கு எதிரான தடையை நீக்கினார். ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள் அடக்கி தங்களின் வீரத்தை காட்டும் ஜல்லிக்கட்டு வீரர்கள் என இருக்கும் இந்த விழாவில் அலங்காநல்லூரில் கானம் உலகம் முழுவதும் இருந்து வருவார்கள்.

-விளம்பரம்-

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு :

இந்த நிலையில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இந்த விலாவில் சீறிப்பாயும் காளைகளை அடக்கும் வீரர்களை காண ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அம்பில் மகேஷ், மூர்த்தி, பழனி வேல் தியாகராஜன் மற்றும் நடிகர் சூரி போன்றவர்கள் கலந்து கொண்டு ஆட்டத்தை ரசித்தனர். நடிகர் சூரி கடந்த சில வருடங்களாக ஜல்லிகட்டு மாடுகளை வளர்த்து வருகிறார் என்பது குறிபிடதக்கது.

- Advertisement -

நடிகர் சூரி :

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் சூரி. இவர் விவேக், சந்தானத்திற்கு பிறகு காமெடியில் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சீரியலில் தான் இவர் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த நினைவிருக்கும் வரை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணில கபடி குழு படத்தின் மூலம் தான்.

சூரி காளை :

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சூரி ஒரு நடிகனாக மட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டு பிரியரும் ஆவார். இதனால் கடந்த பல வருடங்களாக ஜல்லிகட்டு காளைகளை வளர்த்து ஜல்லிகட்டின் போது வடிவாசலில் கலந்து கொள்ள வைப்பர். இந்த நிலையில் நடிகர் சூரியின் 2 காளைகள் இந்த வருடம் நடந்த ஜல்லிகட்டு போட்டியில் கலந்து கொள்ள வைத்தார். வழக்கம் போல முனியாண்டி சாமி காளை அவிழ்த்துவிடப்பட்டது அதனை யாரும் அடக்கவில்லை.

-விளம்பரம்-

வீரர்களை சுழற்றி அடித்த காளை :

பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியை உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் நடிகர் சூரியும் அமர்ந்திருந்தார். மேலும் இந்த ஜல்லிகட்டில் கலந்து கொண்ட சூரி சார்பில் இரண்டு காளைகள் களமிறங்கின. முதல் காளை வீரர்களிடம் பிடிபட்ட நிலையில் இரண்டாவது காளை “கருப்பன்” மாடுபிடு வீரர்களை காற்றில் பறக்கவிட்டு வெற்றியை தட்டியது. மேலும் இந்த ஜல்லிகட்டில் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சியை சேர்ந்த காளை மாடுகளும் கலந்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

Advertisement