அன்புமணி ராமதாஸ் மகள் தயாரித்துள்ள ‘அலங்கு’ எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

0
130
- Advertisement -

முதன்முதலாக அன்புமணி ராமதாஸ் மகள் தயாரித்திருக்கும் படம் தான் ‘அலங்கு’. இயக்குனர் எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் நடிகர்கள் குணாநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத், அம்பானி சரத் உட்பட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். மனிதனுக்கும் நாய்க்கும் உள்ள பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

கோயம்புத்தூர் மலைப்பகுதியில் தனது தாய் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் குணாநிதி. இவர் தனது நண்பர்களுடன் இணைந்து சின்ன சின்ன வேலைகளை செய்து வருகிறார். ஒருமுறை ஒரு நாயை புதைக்க தனது நண்பர்களுடன் குணாநிதி செல்ல, அப்போது அந்த நாய் உயிருடன் இருப்பதை அறிந்ததும் அதை தன்னுடன் அழைத்து வந்து வளர்க்க ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் கேரளா எல்லைப் பகுதிக்கு தனது நண்பர்களுடன் தனது நாயையும் அழைத்துக் கொண்டு வேலைக்கு செல்கிறார் குணாநிதி.

- Advertisement -

இவர்கள் அனைவரும் கேரளாவில் ஊர் தலைவராக இருக்கும் செம்பன் வினோத் வீட்டில் வேலை செய்கிறார்கள். அப்போது செம்பன் வினோத் மகளை ஒரு நாய் கடித்து விடுகிறது. இதனால் கோபமடைந்த செம்பன் வினோத், தன்னுடைய உதவியாளர் சரத் அப்பானியிடம் ஊரில் இருக்கும் நாய்கள் அனைத்தையும் கொல்லச் சொல்லி உத்தரவிடுகிறார். அதனால் குணாநிதி வளர்க்கும் நாய்க்கும் சிக்கல் ஏற்படுகிறது. அவரின் நாயை காப்பாற்றும் போது சரத் அப்பானியின் கைகை வெட்டிவிட்டு குணாநிதி மற்றும் நண்பர்கள் தப்பித்து ஓடுகிறார்கள்.

ஆத்திரமடைந்த சரத் அப்பானி, அவர்கள் அனைவரையும் மற்றும் நாயையும் கொல்ல முயற்சி செய்கிறார். இறுதியில் குணாநிதி தனது நாயுடன் தப்பினாரா? சரத் அப்பானி, குணாநிதியை தேடி கண்டுபிடித்துக் கொன்றாரா? என்பதுதான் மீதிக் கதை. எல்லா உயிர்களும் ஒரே உயிர் தான் என்பதை உரக்க சொல்லி இருக்கும் இயக்குனரின் கதைக்களம் அருமை. படத்தின் கதாநாயகன் குணாநிதி, தர்மன் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

மேலும், ஊர் தலைவராக வரும் செம்பன் வினோத், தாய் மாமாவாக வரும் காலி வெங்கட் ஆகியோர் தங்கள் நடிப்பின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். குறிப்பாக சரத் அப்பானி வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். குணாநிதிக்கு நண்பராக வரும் உதயகுமார் மற்றும் மாஸ்டர் அஜய் இருவரும் தங்கள் நடிப்பை கவனிக்க வைத்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் அஜுஸ் இசையில் அமைந்திருக்கும் பாடல் ஒகே ரகம் தான். ஒளிப்பதிவாளர் பாண்டிகுமார், காடு மற்றும் மலைகளை அழகாக படம் பிடித்து இப்படத்திற்கு பெரிய பலத்தை சேர்த்திருக்கிறார்.

நிறை :

கதைக்களம் அருமை

நடிகர்கள் தேர்ந்தெடுத்த விதம் சிறப்பு

ஒளிப்பதிவு பலம்

குறை :

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் இருக்கிறது

படத்தின் பாடல்களில் சிறிது கவனம் செலுத்தி இருக்கலாம்.

மற்றபடி பெரிதாக குறைகள் எதுவும் இல்லை

மொத்தத்தில் ‘அலங்கு’ நல்ல முயற்சி

Advertisement