அவரு நிறைய Race ஒட்டி இருக்கார் ஆனாலும் – அஜித் குறித்து பேசிய பா ஜ க அலிஷா அப்துல்லா. என்ன இப்படி சொல்லிட்டாரு.

0
477
alisha
- Advertisement -

அஜித்தை விமர்சித்து அலிசா அப்துல்லா அளித்துள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்தியாவின் மிக பிரபலமான கார், பைக் ரேசர் அலிஷா அப்துல்லா. இவரே இந்தியாவின் முதல் பெண் பைக் ரேஸரும் ஆவார். இவர் சிறு வயதில் இருந்தே தானுந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். இவர் தன்னுடைய எட்டு வயதில் இருந்தே பயிற்சி பெற்று வருகிறார். அதில் இவர் சாதனையும் படைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இரும்பு குதிரை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்பட உலகில் நடிகையாக அறிமுகமானார். மேலும், இவர் நடிகர் அஜித்தின் தோழியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கார், பைக் ரேசரும், சினிமா நடிகையுமான அலிசா அப்துல்லா அவர்கள் அண்ணாமலையின் முன்பாக பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

பாஜக கட்சியில் சேர்ந்த அலிஷா அப்துல்லா:

இவருக்கு அண்ணாமலை பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். சமீபத்தில் இந்தி மொழி குறித்து பேசி பாஜக உறுப்பினர் அலிசா அப்துல்லா சர்ச்சையில் சிக்கி இருந்தார். அதில் அவர், என்னை தமிழ் படிக்க சொல்லி அழுத்தம் கொடுத்தனர். ஹிந்தி திணிப்பு என்று சொல்கிறீர்களே இது தமிழ் திணிப்பு இல்லையா? என்று பேசியிருந்தார். இதனால் இவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.

அலிசா அப்துல்லா அளித்துள்ள பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் அஜித்தை விமர்சித்து அலிசா அப்துல்லா அளித்துள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது, அலிசா அப்துல்லா பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் அஜித் குறித்து கூறி இருந்தது, அஜித் அவர்கள் நிறைய பைக் ரேஸ், கார் ரேஸ் செய்திருக்கிறார். ஆனால், இதுவரையும் அவர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றது கிடையாது. அதேபோல் அவருக்கு நான் சீனியர்.

-விளம்பரம்-

அஜித் குறித்து சொன்னது:

நான் அவருக்கு பயிற்சியும் கொடுத்திருக்கிறேன். நாங்கள் இருவருமே சேர்ந்து ரேஸ் செய்யும் போது நான் வெற்றி பெற்று இருக்கிறேன். அவர் ரேசில் சின்ன சின்ன மிஸ்டேக் செய்து இருக்கிறார் என்று கூறி இருந்தார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement