ரசிகை இழப்பு, பாதிக்கப்பட்ட சிறுவன், சட்ட நடவடிக்கைகள் – ஜாமீனுக்குப் பிறகு அல்லு அர்ஜூன் உருக்கம்

0
262
- Advertisement -

ஜாமினில் வெளிவந்த பிறகு பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக நடிகர் அல்லு அர்ஜுன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கில் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘புஷ்பா 2’ படம் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தின் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் வெளியாவதற்கு முன்தினம் திரையிடப்பட்டது. அப்போது படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு வர இருப்பதாக தகவல் தெரிந்தவுடன் அங்கு சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் கூடி இருந்தார்கள்.

-விளம்பரம்-

பின் ரசிகர்கள் அல்லு அர்ஜுனை பார்க்க திரையரங்கிற்குள் முந்தி அடித்துக்கொண்டு நுழைந்திருந்தார்கள். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஏராளமானோர் மூச்சு திணறி மயங்கி விழுந்திருந்தார்கள். அப்போது இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, சுமார் 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகனும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுக் கொண்டு இருக்கிறார். வென்டிலேட்டர் மூலம் அவருக்கு ஆக்சிஜன் கொடுத்து அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

ரசிகை மரணம்:

இதை அடுத்து கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தியா திரையரங்கம், நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் குழு மீது போலீசார் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தார்கள். எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்ததாகவும், அவரது பாதுகாப்புக்கு குழுவினர், ஏற்கனவே குழப்பமான சூழ்நிலையை மோசமாக்கும் வகையில் ரசிகர்களை பிடித்து தள்ளியதாகவும் காவல்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அல்லு அர்ஜுன் கைது:

இந்த சம்பவத்தை தொடர்ந்து, நடிகர் அல்லு அர்ஜுன் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு தொகையை கொடுப்பதாக அறிவித்திருந்தார். மேலும், ரசிகை ரேவதி உயிரிழந்த விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தும், சில தினங்களுக்கு முன் அல்லு அர்ஜுனை அவரது வீட்டில் வைத்து போலீஸ் கைது அவரை காவல் நிலையம் அழைத்து சென்று இருந்தார்கள். அவருடன் சந்தியா திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளர் இருவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

-விளம்பரம்-

அல்லு அர்ஜுன் பதிவு:

இந்த வழக்கு தொடர்பாக அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விதிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டு இருந்தது. மேலும், அல்லு அர்ஜுனின் இந்தக் கைது நியாயமற்றது என்று கண்டித்து திரைப்பிரபலங்கள், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் உள்ளிட்ட பலரும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் அவர்கள் போஸ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த சிறுவன் நிலையை அறிந்து ஆழ்ந்த கவலையில் இருக்கிறேன்.

சிறுவன் குறித்து சொன்னது:

சட்டபடி நடவடிக்கைகள் நடந்து கொண்டிருப்பதால் நான் அவரையும் அவருடைய குடும்பத்தினரும் சந்திக்க வேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்தி இருந்தார்கள். எப்போதும் நான் அவரையும் அவருடைய குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அவருடைய மருத்துவ செலவுகள் உட்பட அவருடைய குடும்ப செலவுகளையும் பொறுப்பேற்று கொள்கிறேன். கூடிய விரைவிலயே அந்த சிறுவன் குணமடைந்து வரவேண்டும். விரைவில் அவரையும் அவருடைய குடும்பத்தையும் சந்திக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று எமோஷனலாக பதிவிட்டிருக்கிறார்.

Advertisement