தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த புஸ்பா படம் மிக பெரிய அளவில் அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. இயக்குனர் சுகுமார் தான் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார்கள். ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. தற்போது அனைவரும் எதிர்பார்த்த புஷ்பா 2: தி ரூல் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகமான புஷ்பா : தி ரைஸ் படத்தில் அல்லு அர்ஜுன் அவர்கள் புஷ்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் லாரி டிரைவராக இருக்கிறார். சாதாரண கூலி வேலை செய்யும் புஸ்பா செம்மரக்கட்டைகளை கடத்தும் டிரைவராக இருந்தார். பல போராட்டங்களுக்கு பின் புஷ்பா செம்மரக்கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார். பின் அவர் தன் மூளையை பயன்படுத்தி பலவகையில் செம்மரக்கட்டைகளை கடத்தி வருகிறார்.
இதை தடுத்து செம்மர கட்டைகளை பிடிக்க போலீஸ் பல வகைகளில் முயற்சி செய்கிறது. ஒரு கட்டத்தில் நேரடியாக வியாபாரம் செய்யலாம் என்று புஷ்பா நினைத்தார். இதனால் மிகப்பெரிய அளவில் புஷ்பாவிற்கு பிரச்சனைகளும், பல எதிரிகளும் வருகிறார்கள். எல்லோரையும் எதிர்த்துக்கொண்டு புஷ்பா தன்னுடைய செம்மரக்கடத்தல் தொழிலை தொடங்குகிறார். பின் இந்த பிசினஸை இவர் ஜப்பான் வரை கொண்டு செல்கிறார்.
இதனால் புஷ்பாவை பழிவாங்க அவர் எதிரிகள் துடிக்கிறார்கள். அதோடு தன்னை அவமதித்த முதலமைச்சரை புஷ்பா எப்படி பழி வாங்கினார்? தன் எதிரிகளை புஷ்பா சமாளித்தாரா? அதற்காக அவர் என்னென்ன செய்தார்? என்பது தான் இரண்டாவது பாகத்தின் மீதி கதை. இந்த படம் பிரம்மாண்டமாக இந்தியா முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் பாதியில் புஷ்பாவினுடைய வளர்ச்சியை காண்பித்து அடுத்த அவர் எதை நோக்கி ஓடுகிறார்.
அதை அவர் எப்படி செய்கிறார் என்பதை இயக்குனர் கமர்சியல் பாணியில் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் கொடுத்து இருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் மத்தியில் விசில் அடிக்க வைத்திருக்கிறது. ஆனால், இடைவெளிக்கு பிறகு வரும் சில பில்டப் வசனங்கள் கொஞ்சம் சளிப்படைய வைத்திருக்கிறது. புஷ்பாவாக படத்தில் அல்லு அர்ஜுன் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். இவரின் மனைவியாக ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் வரும் ராஷ்மிகா கலக்கியிருக்கிறார்.
இருவரின் கெமிஸ்ட்ரியுமே படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. பகத் பாஸில் மிரட்டி இருக்கிறார். முதல் பாகத்தில் அவருடைய நடிப்பு வேற லெவல் இருந்தது. ஆனால், இரண்டாம் பாகத்தில் அவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக காண்பித்திருக்கலாம். படத்திற்கு பின்னணி இசையும் ஒளிப்பதிவுமே பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது. ஆங்காங்கே சில லாஜிக் குறைகள் இருந்தாலுமே படத்தின் கதைகளம் அதை மறைத்து விடுகிறது.
படத்தின் நீளம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடி இருக்கிறது. இருந்தாலுமே சளிப்படையாமல் இயக்குனர் கதையை கொண்டு சென்றிருக்கிறார். சென்டிமென்ட், ஆக்சன் காட்சிகள் எல்லாம் பட்டையை கிளப்பி இருக்கிறது. படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ரீலீலா வந்திருந்தாலும் பார்வையாளர்களை அசர வைத்திருக்கிறார். மொத்தத்தில் ஒரு பக்கா கமர்சியல் படமாக புஸ்பா 2 இருக்கிறது.
நிறை:
அல்லு அர்ஜுன், ராஷ்மிகாவின் நடிப்பு சிறப்பு
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
இயக்குனர் கதைக்களம் அருமை
பின்னணி இசை,ஒளிப்பதிவு சூப்பர்
ஆக்சன், சென்டிமென்ட் காட்சிகள் நன்றாக இருக்கிறது
குறை:
பகத் பாசிலின் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
சில தேவை இல்லாத வசனங்களை நீக்கி இருக்கலாம்
மொத்தத்தில் புஷ்பா 2 – பக்கா கமர்சியல்