தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு அல்லு அர்ஜுன் கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியா முழுவதும் அல்லு அர்ஜுன் பற்றிய செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. புஷ்பா 2 படம் பார்க்க திரையரங்குக்கு வந்த அல்லு அர்ஜுனை பார்க்க சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் கூடி இருந்தார்கள். இந்த கூட்ட நெரிசலில் ஏராளமானோர் மூச்சு திணறி மயங்கி விழுந்திருந்தார்கள். அந்த நெரிசலில் சிக்கி, சுமார் 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகனும் கோமாவில் இருக்கிறார். இதை அடுத்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தியா திரையரங்கம், நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாப்பு குழு மீது போலீசார் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தார்கள்.
பின் கடந்த வாரம் அல்லு அர்ஜுனை அவரது வீட்டில் வைத்து போலீஸ் கைது செய்து இருந்தது. இந்த வழக்கு தொடர்பாக அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மேலும், அல்லு அர்ஜுனின் இந்தக் கைது நியாயமற்றது என்று கண்டித்து திரைப்பிரபலங்கள், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் உள்ளிட்ட பலரும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். பின் இது தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுன் செய்தது மனிதத் தன்மையற்ற, பொறுப்பற்ற செயல். சந்தியா திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் வந்தால் கூட்டம் கூடும் என்பதாலே காவல்துறையினர் அவருக்கு அனுமதி தர மறுத்திருந்தார்கள். இருந்துமே அவர் படம் பார்க்க வந்திருந்தார்.
அல்லு அர்ஜுன் சர்ச்சை:
அதுவும் கார் கதவு திறந்து ரோட் ஷோ காட்டிக் கொண்டு வந்திருந்தார். கூட்ட நெரிசல் அதிகமான உடனே ஏசிபி அவரை வெளியே போகுமாறு சொல்லியும், அல்லு அர்ஜுன் படம் முடிந்தவுடன் போவதாக சொன்னார். பின் வெளியே போகும் போது கூட ரோட் ஷோ காண்பித்து கொண்டு தான் போகிறார். இந்த கூட்டத்தில் தான் ஒரு பெண் அநியாயமாக உயிரிழந்திருக்கிறார். 9 வயது சிறுவன் கோமாவில் இருக்கிறான். இது வருத்தத்துக்குரிய ஒன்று. நடிகர்கள், பிரபலங்கள் பலருமே அல்லு அர்ஜுனுக்கு தான் ஆதரவு தெரிவித்தார்கள். யாருமே பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை நேரில் சென்று கூட பார்க்கவில்லை. விபத்தில் கை,கால் போன மாதிரி அல்லு அர்ஜுனை நேரில் சென்று நலம் விசாரித்து வருகிறார்கள். அல்லு அர்ஜுன் கூட பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று பார்க்கவில்லை. இதுதான் உங்களுடைய மனிதமா? இந்த சம்பவம் அவருக்கு மட்டுமில்லை பிரபல நட்சத்திரங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல பாடமாக இருக்கட்டும் என்று கூறி இருந்தார்.
அல்லு அர்ஜுன் பேட்டி:
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில் அல்லு அர்ஜுன், ஹைதராபாத் திரையரங்கில் நடந்தது எதிர்பாராத சம்பவம். இதில் யாருடைய தவறுமே கிடையாது. பொறுப்பில்லாமல் நான் கூட்ட நெரிசலில் ரோடு சோவில் நடந்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தான் காரில் இருந்து வெளியே வந்து முகத்தை காட்டினால் ரசிகர்கள் அமைதியாகுவார்கள் என்று தான் அப்படி செய்தேன். கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்ததாகவும் சிறுவன் பாதிக்கப்பட்டதாகவும் சொன்னார்கள். உடனே அவர்களைப் பார்க்க ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்று போனேன். அதற்கு அங்கு சென்றால் இன்னும் நிலைமை மோசமாகிவிடும் சரியான நேரம் வரும்போது போகலாம் என்று வழக்கறிஞர்கள் சொன்னதால் தான் அமைதியாகிவிட்டேன்.
விமர்சனங்களுக்கு கொடுத்த பதில்:
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு என்னுடைய அப்பாவை அனுப்பி அனுப்பி இருந்தேன். எனக்கும் குடும்பம் இருக்கிறது. மனைவியின் இழப்பு, குழந்தையின் இழப்பு எவ்வளவு கஷ்டம் வழி என்பது என்னால் உணர முடியும். மனித நேயம் அற்றவன், கெட்டவன், மோசமானவன் என்று என்னை சித்தரிக்க முயல்வதை நிறுத்துங்கள். இது ரொம்பவே எனக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வு தெரிந்து நான் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலுமே கலந்து கொள்ளவில்லை. எந்த ஒரு நிகழ்ச்சி ஏற்பாடும் செய்யாதீர்கள் என்றேன். அதோடு நான் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல், காவல்துறைக்கும் சொல்லாமல் திரையரங்கிற்கு சென்றதாக சொல்கிறார்கள். ஆனால், நான் திரையரங்கிற்கு வருவது குறித்து திரையரங்கத்தினருக்கு முன்பே காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
What a performance 👏 pic.twitter.com/Zl6tzoaOdb
— FreakOut 🚁 (@FreakoutTM) December 21, 2024
நெட்டிசன்கள் விமர்சனம்:
நீதிமன்றத்திலும் அது தொடர்பாக விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. உரிய ஆவணத்துடன் அதை நிரூபிக்க போராடி வருகிறோம். ஆனால், இந்த விவகாரத்தில் நிறைய தவறான செய்திகளை பரப்புகிறார்கள். மக்களிடம் என்னை கெட்டவன் போல சித்தரிக்க என்னை சுற்றி பல சதி வேலைகளையும் நடக்கிறது. நானும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும், சிகிச்சை பெற்று வரும் குழந்தைக்கும் என்னவெல்லாம் நல்லது செய்யணும் என்று யோசித்துக்கொண்டு தான் இருக்கிறேன். எல்லாத்தையும் தாண்டி பாதிக்கப்பட்டது என்னுடைய ரசிகர். அவர்களுக்காக நான் என்றும் துணை நிற்பேன். என்மீது தொடரப்பட்ட வழக்கை நான் சட்டப்படி சந்திக்கிறேன். பல ஆண்டுகளாக உழைத்து சம்பாதித்த பெயரையும் நம்பிக்கையையும் வைத்திருக்கிறேன். ஒரே இரவில் அதைக் கெடுப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று பேசி இருக்கிறார். இந்த நிலையில் பெண் ரசிகை இறந்த அடுத்த நாள் வீட்டிலேயே அல்லு அர்ஜுன் புஸ்பா 2 பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாட்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் டெல்லியில் நடந்த விழாவில் கலந்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோவை தான் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்