தமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவான ‘நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் தனது இரண்டாவது படமாக ‘பிரேமம்’ படத்தை இயக்கி புகழ்பெற்றார். ஆனால் பிரேமம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக படம் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன் தற்போது பிரித்விராஜ், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் கோல்டு என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் டிரையலர் அன்மையில் வெளியானது வரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதோடு, அடிக்கடி தனது எண்ணங்களையும் கேள்விகளையும் அதில் தெரியப்படுத்தி வருகிறார்.

இந்தநிலையில் அல்போன்ஸ் புத்ரன் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடியபோது ரசிகர் ஒருவர் விஜய்யை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள் என்கிற கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்ரன், பிரேமம் படம் வெளியானதும் தமிழ்நாட்டில் இருந்து எனக்கு முதல் வந்த பாராட்டு அழைப்பு நடிகர் விஜய்யிடம் இருந்து தான். அதன்பிறகு அவரை நான் பர்சனலாக நேரிலும் சந்தித்து பேசினேன். ஒருநாள் அவர் என்னை அழைத்து படம் இயக்க சொல்லுவார் என நம்புகிறேன். அதற்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.

Advertisement

ரஜினி,கமலுக்கு என்னிடம் ஸ்கிரிப்ட் உள்ளது :-

இந்நிலையில், விக்ரம் படத்தின் போர்கொண்ட சிங்கம் பாடலை தனது பேஸ்புக் பக்கத்தில் நல்ல பாடல் என தலைப்பிட்டு ஷேர் செய்திருந்தார். அவரது அந்தப் பதிவில் கமென்ட் செய்திருந்த ரசிகர் ஒருவர், நடிகர் ரஜினியை வைத்து படம் எடுப்பீர்களா என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்திருந்த அல்போன்ஸ் புத்திரன், ‘ரஜினி அல்லது கமலை நான் தனியாக சந்தித்தால் அவர்கள் இணைந்து நடிக்கும் படியான ஸ்கிரிப்ட் ஒன்றை வைத்திருக்கிறேன். கதை கேட்டால் அவர்களுக்கு நிச்சயம் பிடிக்கக் கூடும். ஆனால், அதற்கான அதிர்ஷ்டம் எனக்கு இன்னும் அமையவில்லை.

வாய்ப்பிற்காக காத்திருப்பு :

அதனால், இன்னும் அவர்களை என் வாழ்க்கையில் இன்றைய தேதி வரை சந்திக்காமல் இருக்கிறேன். இனி வரும் காலத்தில் ஒருவேளை அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அமைந்து அவர்களுக்கும் என் கதை பிடித்துவிட்டது என்றால், என்னுடைய எல்லா திறமைகளையும் நான் உபயோகித்து நல்லதொரு பொழுதுபோக்கு படமாக அமைய என் குழுவுடன் கடினமாக உழைப்பேன். நிச்சயம் அந்த திரைப்படம் ரஜினி, கமல் இருவருக்கு மட்டுமல்ல அவருடைய ரசிகர்களுக்கும் மிக பிடித்த ஒன்றாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்

Advertisement

இளையராஜா இசை பள்ளி :-

இவர் தற்போது இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா ஒரு இசைப் பள்ளியைத் தொடங்க வேண்டும் என்றும்
இளையராஜாவின் இசைப் பள்ளியில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான கீரவாணி, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், தேவா, அனிருத் ஆகியோருடன் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் பேராசிரியர்களாக இருக்க
வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அல்போன்ஸ் புத்ரன்னின் வித்தியாசமான எண்னம் தற்போது சமுகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

கமல்ஹாசன் நடிப்பு பள்ளி :-

கமல் ஹாசன் நடிப்புப்பள்ளியை துவங்க வேண்டும் என்றும் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு நடிகர் கமல் ஹாசன் நடிப்பு பயிற்சி பள்ளி ஒன்றை துவங்கி, நடிப்பில், இயக்கத்தில் ஆர்வமுடன் இருக்கும் குழந்தைகளுக்கு தினமும் 45 நிமிடம் வகுப்பெடுக்க வேண்டும் என்றும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். ஒருவேளை அவர் அப்படி நடிப்பு பயிற்சி பள்ளியை துவங்கினால், இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர், பாசில், பிரியதர்ஷன், எஸ்.எஸ்.ராஜமெளலி, சந்தான பாரதி ஆகியோர் விசிட்டிங் பேராசிரியர்களாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு, கமல் ஹாசன் நினைத்தால் கிறிஸ்டோபர் நோலனை விசிட்டிங் பேராசிரியராக நியமித்து, திரைப்பட இயக்கத்தில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து வகுப்பெடுக்கலாம் என்றும், ஒருநாள், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் ஆகியோர் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேற்கூறிய அனைவரும் தங்களது படங்களின் மூலம் தனக்கு விர்ச்சுவல் பேராசிரியர்களாக இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

Advertisement