மானஸாவின் முன்னாள் காதலருக்கு நிச்சயதார்தம் முடிந்தது..!திருமணம் எப்போது தெரியுமா?

0
2180
Aalyaa-manas
- Advertisement -

விஜய் டிவியில் ராஜா ராணி என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரமபலமடைந்தவர் நடிகை ஆல்யா மானஸா. இவர் விஜய் தொலைக்காட்சியில் வருவதற்கு முன்பே கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.

-விளம்பரம்-

அந்த நிகழ்ச்சியில் இவருக்கு ஜோடியாக நடனமாடியை மானஸ் என்பவரை நீண்ட வருடமாக காதலித்து வந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மானஸ் மற்றும் மானஸா இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர். தற்போது மானஸா ‘ராஜா ராணி’ தொடரில் தன்னுடன் நடித்து வரும் சஞ்சீவை காதலித்து வருகிறார்.

இதையும் படியுங்க : எனக்கு மானஸை காதலிப்பதில் எந்த அசிங்கமும் இல்லை..!

- Advertisement -

ஆனால், மானஸாவிற்கு முன்பே தனது இரண்டாவது காதலை தொடங்கி இருந்தார் மானஸ். நடன இயக்குனராக இருந்து வரும் மானஸ் தன்னிடம் நடனம் பயின்று வரும் சுபீக்ஷ என்பவரை காதலித்து வந்தார். தற்போது இவர்கள் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை சிம்பிளாக நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் இவர்கள் இருவருடைய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்துகொண்டனர். இவர்கள் இருவரது திருமணம் 2019 ஜூன் ஜூலைக்குள் இருக்கலாம் என்று மானஸ் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement