ஆல்யா மானஸா நடிக்கும் ‘இனியா’ சீரியலில் ஹீரோ யார் தெரியுமா ? பல ஆண்டு கழிச்சி நடிக்க வந்திருக்கார்.

0
2488
alya
- Advertisement -

ஆல்யா மானசா நடிக்கும் இனியா சீரியல் குறித்த புதிய அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் தான் போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார். அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யா நடித்து இருந்தார்.

-விளம்பரம்-
alya

மேலும், இந்த சீரியலில் சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். அதோடு இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார் ஆல்யா.

- Advertisement -

ஆல்யா- சஞ்ஜீவ் நடிக்கும் சீரியல் :

பிறகு விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யா நடித்து கொண்டு வந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். பின் ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. மேலும், இரண்டாவது குழந்தைக்கு பிறகு ஆல்யா உடல் எடை கூடி இருந்தார்.

உடல் எடை குறைவு:

இவர் சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் அடிக்கடி வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். சமீபத்தில் ஆல்யா சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறி இருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இதனால் ஆல்யா மானஸா சீரியலில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

இனியா சீரியல்:

மேலும், சரிகம புரொடக்ஷன் தயாரிக்கும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் தான் ஆல்யா நடிக்கிறார். டிசம்பர் 5ஆம் தேதியிலிருந்து 9 மணிக்கு இனியா சீரியலை ஒளிபரப்ப சன் டிவி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான ப்ரோமோக்கள் எல்லாம் சன் டிவியே வெளியிட்டு இருந்தது. திங்கள் முதல் இரவு ஒன்பது மணிக்கு இனியா சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. கதாநாயகன் விக்ரம் கதாபாத்திரத்தில் ரிஷி நடிக்கிறார். இந்த கதையை சேக்கிழார் எழுதுகிறார், நாராயணமூர்த்தி இயக்குகிறார்.

சீரியலின் கதை:

இந்த தொடரின் கதாநாயகி இனியா மிகவும் சுட்டி பெண். துருதுரு என்று ஏதாவது ஒரு விஷயங்களை செய்து கொண்டிருப்பார். தன்னுடைய அக்காவுக்கு கல்யாணம் செய்து வைக்க ஒரு நல்ல வாழ்க்கை துணையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று ஒரு லட்சியத்தோடு போராடுகிறார். அதோடு இவர் நல்லதுக்காக சின்ன சின்ன தவறுகளை கூட செய்யலாம் என்று நினைப்பவர். கதையின் நாயகன் விக்ரம் போலீஸ் இன்ஸ்பெக்டர். ரொம்ப ஸ்ட்ரிட்டான அதிகாரி. சின்ன சின்ன தப்பை கூட பூதக்கண்ணாடி வைத்து பார்ப்பவர். தப்பை கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியாதவர். எதிரும் புதிரியாய் இருக்கும் நாயகனும் நாகியும் இணைந்தால் என்ன நடக்கும் என்பது தான்? இந்த தொடர் உடைய கதை.

Advertisement