ஆல்யா மானஸாவா இது ? இரண்டாம் குழந்தைக்கு பின் எப்படி ஆகிட்டார் பாருங்க. கம்பேக் கொடுப்பாரா ?

0
600
Alya
- Advertisement -

உடல் எடையை குறைத்து ஆலியா மானசா மீண்டும் சீரியலில் காம்பேக் கொடுக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. அதற்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார் ஆல்யா.

-விளம்பரம்-

பின் இந்த ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள். இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார் ஆல்யா.

- Advertisement -

ஆல்யா- சஞ்ஜீவ் நடிக்கும் சீரியல் :

பின் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யா கலக்கிக் கொண்டு வந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கயல் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்து வந்தார். கர்ப்பமாக இருந்தாலும் ஆல்யா தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால், ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

ஆல்யாவுக்கு பிறந்த குழந்தை:

ஆல்யா விலகியதை அடுத்து தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் ஆல்யாவிற்கு மகன் பிறந்து இருக்கிறார். ஏற்கனவே முடிவு செய்தபடி ‘அர்ஷ்’ என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது ஆல்யா மொத்தமாக சின்னத்திரைக்கு பாய் சொல்லி விட்டார். ஆனால், சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

யூடியூப் சேனல் :

மேலும், இருவரும் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றன. அதில் அவ்வப்போது அவர்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்களுடைய சேனலை லட்சக்கணக்கான பேர் பாலோ செய்கிறார்கள். தற்போது ஆல்யா குடும்பம், குழந்தைகள், கணவருடன் தன்னுடைய நேரத்தை செலவழித்து வருகிறார். தாங்கள் தொடங்கியுள்ள சேனல் மூலம் ஆல்யாவை தினமும் ரசிகர்கள் பார்க்கிறார்கள். இரண்டாவது குழந்தைக்கு பிறகு ஆல்யா உடல் எடை கூடி இருக்கிறார். இந்த நிலையில் ஆல்யாவிடம் அவருடைய கணவர் சஞ்சய் ரீ-என்ட்ரி பற்றி கேட்டிருக்கிறார்.

ஆல்யா ரீ-என்ட்ரி:

அதற்கு ஆல்யா, சீரியலில் நடிக்க சென்றுவிட்டால் கட்டாயம் டயட் இருக்க வேண்டும். சரியாக சாப்பிட முடியாது. எனவே இன்னும் கொஞ்சம் நாள் நல்லா சாப்பிட்டு ஆரோக்கியமாக மாறிய பின்பு உடல் எடையை குறைத்து ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்று சொல்கிறார். உடனே சஞ்சீவ், உனக்கு யாருடன் நடிக்க ஆசை? என கேட்க, உங்களுடன் தான் என்று சைகை காட்டினார் ஆல்யா. ஆனால், நான் எப்படி அந்த சீரியலை விட்டு வர முடியும் என்கிறார் சஞ்சீவ். ஆலியா உங்களுடன் தான் நடிப்பேன் என்று கூறி கடைசியாக இன்னும் சில மாதங்கள் கழித்து ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்று ஆல்யா கூறியிருக்கிறார்.

Advertisement