முன்னனி நடிகைகளை கூட பின்னுக்கு தள்ளிய ஆல்யா மானஸா.!இதில் அவர் தான் நம்பர் 1.!

0
953
alya-manasa

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி’ தொடர் மூலம் இல்லத்தரசிகள் மத்தியிலும் இளசுகள் மத்தியிலும் பெரும் பிரபலமடைந்தவர் ஆல்யா மானஸா. இந்த தொடருக்கு முன்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மானஸ் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். அதன் பின்னர் ராஜா ராணியில் நடித்து வரும் கார்த்திக்கை காதலித்து வருகிறார்.

இதையும் படியுங்க : ராஜா ராணி சஞ்சீவ் இஸ்லாம் மதத்தை சார்ந்தவரா…? அல்யா மானஸா வெளியிட்ட உண்மையான பெயர்..! 

- Advertisement -

சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா மானஸா, இதுநாள் வரை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று புகைப்படங்களை பதிவிட்டு வந்த ஆல்யா தற்போது ஷேர்சாட்டில் முதல் இடத்தில் உள்ளார்.

தற்போது முகநூல், ட்விட்டர் , இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளம் போலவே ஷேர் சாட் (sharechat) எனப்படும் புதிய வகை செயலி பிரபலமடைந்து வருகிறது. இதில் ஆல்யா மானஸாவை தான் அதிக பேர் பின்தொடர்ந்துள்ளனர்.அதை அவரே பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement