கொரோனா கூட பரவாயில்லை, கர்ப்பமாக இருக்கும் போது இப்படி பண்ணலாமா – ஆல்யாவிற்கு ரசிகர்கள் அட்வைஸ்.

0
60431
alya
- Advertisement -

தமிழ் சினிமா திரைப்படங்களுக்கு நிகராக தற்போது தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. சினிமா துறையில் உள்ள நடிகர், நடிகைகளின் புகழுக்கு நிகராக சீரியல் நடிகர்களும் மக்கள் மனதில் அதிக இடம் பிடித்துள்ளனர். சமீப காலமாக மக்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பதில் தான் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். அதிலேயேயும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள், பல குடும்பங்களின் மனதில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

ராஜா ராணி சீரியலில் சின்னையாவாக சஞ்சீவும்; செம்பாவாக ஆலியா மானசாவும் நடித்து இருந்தார்கள். இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு பகிரங்கமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விஜய் டிவியிலும் இதுகுறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : இயக்குனர் ரஞ்சித்துக்கு பிறந்த இரண்டாவது குழந்தை. வைரலாகும் புகைப்படம் இதோ.

ஆனால், இவர்கள் திருமணம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்தது. அதற்கு கரணம் ஆலியா மானசா வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது தான் என்று கூறப்படுகிறது. இவர்களுடைய திருமணம் ரகசியமாக முடிவடைந்தாலும் திருமண வரவேற்பு விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.

-விளம்பரம்-

இந்த விழாவில் நண்பர்களும், உறவினர்களும், திரைஉலக நட்சத்திரங்களும் கலந்து கொண்டு கோலாகலமாக கொண்டாடினார்கள். பின் ஆலியா மானசா திருமணத்திற்குப் பிறகும் நடிக்க வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஆலியா மானசா இப்போது கர்ப்பமாக உள்ளார்.

சமீபத்தில் தான் ஆலியா மானசாவுக்கு வளைகாப்பு நடந்து முடிந்தது. இவர் கர்ப்பமாக தொடங்கியதில் இருந்து இப்போது வரை தன்னுடைய குழந்தை குறித்து ஒவ்வொரு அப்டேட்டுகளையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் ஆல்யா மானஸா புதிய விளம்பர படத்தில் நடித்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் கொரோனா கூட பரவாயில்லை, இப்படி கர்ப்பமாக இருக்கும் போது இப்படி விளம்பரத்தில் எல்லாம் நடிக்கலாமா என்று கேட்டதற்கு, தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையோடு தான் இந்த விளம்பரத்தில் நடித்தேன் என்று கூறியுள்ளார் ஆல்யா.

Advertisement