இயக்குனர் ரஞ்சித்துக்கு பிறந்த இரண்டாவது குழந்தை. வைரலாகும் புகைப்படம் இதோ.

0
9411
paranjith

தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இய்குணராக அறிமுகமானவர் இயக்குனர் ரஞ்சித். அந்த திரைப்படம் இளஞ்சர்கள் மத்தியில் ஒரு ஜாலியான படமாக பார்க்கப்ட்டது. அதன் பின்னர் இவர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் ஹிட் அடித்தது. தொடர்ந்து இரண்டு படங்களின் வெற்றியால் தனது மூன்றாவது படத்தில் இவருக்கு ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image result for pa ranjith family

- Advertisement -

கபாலி, காலா என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி மாஸ் காட்டி வந்தார். காலா படத்திற்கு பின்னர் இவருக்கு பாலிவூட்டிலும் அழைப்பு வந்தது. இயக்குனராக மட்டுமலல்லாமல் இவர் நீலம் ப்ரோடேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் இவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றறிந்த்து .

இதையும் பாருங்க : விஜய் டிவியில் மணிமேகலை பட்ட அவமானம். வீடீயோவை பகிர்ந்து சவால் விட்ட மணிமேகலை.

-விளம்பரம்-

இந்த படத்திற்காக பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டது. பா ரஞ்சித்தின் மனைவி மற்றும் குழந்தைகளை நாம் பார்த்துள்ளோம். இவர்கள் இருவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே இவர்களுக்கு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது ரஞ்சித் இருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனால் ரஞ்சித்தின் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். காலா படத்தை தொடர்ந்து இவர் வேறு எந்த படத்தை இயக்காமல் தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ஆர்யாவை வைத்து சல்பேட்டா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் ஆர்யா நடித்து வருகிறார். மேலும், இதில் ஆர்யா ஒரு பாக்ஸராக நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தில் பாக்ஸர் கேரக்டருக்கு தயாராக ஆர்யாவுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுக்கபப்ட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமீபத்தில் திருமணமானாலும் பாக்ஸிங் கேரக்டருக்காக ஆர்யா முழுவீச்சில் தன்னை தயார்படுத்தி இந்த படத்திற்காக தீவிரமாக உடற்பயிற்சி  செய்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்திற்காக ஆர்யா வைத்து வரும் உடலை பார்த்து பலரும் வியந்து போனார்கள்

Advertisement