ஆடை நாயகி அமலா பாலை போல் ஆடை இல்லாமல் நடித்த தமிழ் பிக் பாஸ் 2 நடிகை. யார் தெரியுமா ?

0
29982
Amala-Paul
- Advertisement -

‘தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். இது மட்டுமல்லாமல் இவரது வாழ்க்கையும் பிக் பாஸ் மாற்றியது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்தாலும் ரசிகர்கள் மனதில் முதல் இடத்தை பிடித்தார்.

-விளம்பரம்-
View this post on Instagram

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547) on

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஆரியுடன் ஒரு படம், நடிகர் மஹத்துடன் ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன் டா ‘ போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகை ஐஸ்வர்யா தத்தா 4 பாடங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இப்படி படங்களில் பிஸியாக இருந்தாலும் அம்மணி சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பார். கடந்த ஆண்டு பிரபல நடிகை அமலா பால் ஆடை படத்தில் மிக தைரியமாக ஆடையில்லாமல் ஒரு சில காட்சிகளில் நடித்து இருந்தார். இது மிகப் பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது. இது அனைவருக்கும் தெரிந்ததே.

- Advertisement -

இதையும் பாருங்க : அவ பழைய காதலனுடன் நைட் பார்ட்டில. சனம் ஷெட்டி குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன தர்ஷன்.

இந்நிலையில் தற்போது நடிகை அமலா பாலை போன்று ஆடையில்லாமல் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா படத்தில் நடித்து உள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. நடிகை ஐஸ்வர்யா தத்தா அவர்கள் pubg என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கான சூட்டிங் நேற்று முன் தினம் நடை பெற்றது. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா தத்தா அவர்கள் சுத்தமாக ஆடை இல்லாமல் ஒரு காட்சியில் நடித்து உள்ளார். இது குறித்து அவரிடம் கேட்ட போது படத்தின் கதைக்கு முக்கியமான காட்சியாக இருந்தால் நான் இப்படியும் நடிப்பேன் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. என்னடா நடக்குது இங்க என்று சொல்லும் அளவிற்கு சினிமாவில் படங்களை எடுத்து வருகிறார்கள் இயக்குனர்கள்.

-விளம்பரம்-

தா தா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ எடுக்கும் படம் PUBG -பொல்லாத உலகில் பயங்கர கேம். இந்த படம் காமெடி திரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா மற்றும் மொட்டை ராஜேந்திரன் லுக் போஸ்டர்கள் எல்லாம் சமீபத்தில் தான் வெளியானது. படத்தை ஜிடிஆர் என்ற நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்கிறார். இப்படத்தில் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

Advertisement